குட் பேட் அக்லி பட ரிலீசுக்கு வேட்டு வைத்த விடாமுயற்சி?.. தல பொங்கல் கன்ஃபார்ம் தான்.. ஆனால்?

சென்னை: லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படம் இந்த ஆண்டு தீபாவளிக்கோ அல்லது கிறிஸ்துமஸ்க்கு கூட வெளியாகாது என தகவல்கள் வெளியாகி உள்ளன.

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியிருப்பதாக கூறுகின்றனர். ஆனால், அடுத்த ஆண்டு அடுத்தடுத்து 2 படங்கள் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் கண்டிப்பாக உற்சாகமடைவார்கள்.

ajith kumar vidamuyarchi good bad ugly

விடாமுயற்சி ரிலீஸ் ஆவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்துக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொங்கலுக்கு விடாமுயற்சி: இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. டிசம்பர் மாதம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள புஷ்பா 2 திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், டிசம்பர் மாதமும் விடாமுயற்சி வெளியாகாது என்றும் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வெளியாகும் என லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குட் பேட் அக்லி ரிலீஸ் எப்போ?: மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற ஆதிக் ரவிச்சந்திரன் அந்த படத்தை பொங்கல் ரிலீஸ் என அறிவித்திருந்தார். ஆனால், அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டு தற்போது பொங்கல் வெளியீட்டை குறி வைத்துள்ள நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் சம்மர் ரிலீஸுக்கு தள்ளிப்போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு விஜய் படங்கள் ரிலீஸ்: வாரிசு படத்துக்குப் போட்டியாக அஜித் துணிவு படத்தை இறக்கினார். அதன் பின்னர் லியோ படத்துக்குப் போட்டியாக விடாமுயற்சியை இறக்க திட்டமிட்டார். ஆனால், விஜய்யின் லியோ மற்றும் கோட் என இரு படங்கள் வெளியான நிலையிலும் இன்னமும் விடாமுயற்சி படம் வெளியாகவில்லை.

டபுள் தமாக்கா: ஆனால், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படமும் அந்த படத்தைத் தொடர்ந்து குட் பேட் அக்லி என அடுத்து ஒரு அஜித் படம் என அடுத்தடுத்து அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2025ம் ஆண்டு காத்திருக்கிறது. இது நிச்சயம் அஜித் ரசிகர்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும் எனக் கூறுகின்றனர்.

அஜித் vs கமல்: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படத்துக்குப் போட்டியாக கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யாவின் கங்குவா படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் இதுவரை இல்லாத நிலையில், அந்த படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வருமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மேலும், விக்ரமின் வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களும் பொங்கலுக்கு வரும் எனக் கூறுகின்றனர். இதனால் கோலிவுட்டில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பெரிய கிளாஷ் உண்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடுமையான உழைப்பு: நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என 2 படங்களையும் சீக்கிரமே முடிப்பதற்கு தன்னால் முயன்ற அளவுக்கு கடுமையான முயற்சிகளை போட்டுள்ளார். ஆனால், சரியான ரிலீஸ் தேதி கிடைக்காத நிலையில் தான் இந்த தாமதம் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X