குட் பேட் அக்லி படத்தை பார்த்த அஜித்?.. தரமான சம்பவத்திற்கு தயாரா இருங்க.. பிரபலம் போட்ட ட்வீட்
சென்னை: அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தை பார்த்த சினிமா ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். முதல் நாளிலேயே வலிமை, விடாமுயற்சி படங்களை காட்டிலும் பெரிய நம்பரில் வசூல் வேட்டை நடத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமும் பிளாஸ்ட் ஆன பிளாக்பஸ்டர் என்றும் போஸ்டரை வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், நடிகர் அஜித் ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படத்தை பார்த்தது போன்ற வீடியோ வெளியாகியிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு மிகப்பெரி பிளாக்பஸ்டர் படமாக அவரது சினிமா கரியரில் அமைந்திருக்கிறது. இப்படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, அர்ஜூன்தாஸ், சுனில், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருக்கின்றனர். படம் வெளியான முதல் நாளே ரசிகர்கள் பட்டாஸ் வெடித்து கொண்டாட தொடங்கினர். ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையும் ரசிக்கும்படி இருப்பதாகக் கூறப்படுகிறது.

திரை பிரபலங்கள் கொண்டாட்டம்: நேற்று வெளியான குட் பேட் அக்லி படத்தை காண இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், நடிகர் சிவகார்த்திகேயன், கனா பட நடிகர் தர்ஷன் மற்றும் அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் இப்படத்தை திரையரங்குகளில் கண்டு ரசி்த்தனர். அதேபோன்று அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகளுடன் வந்து ரசிகர்களுடன் குட் பேட் அக்லி படத்தை கண்டு ரசித்தார். இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி வைரலானது. இதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து குதூகலமடைந்தனர். பின்னர் இப்படத்தில் நடித்திருந்த அர்ஜூன் தாஸூம் ரசிகர்களுடன் வந்து படத்தை பார்த்தார். பிரசன்னா, பிரபு உள்ளிட்ட பலரும் திரையரங்கில் வந்து கண்டு களித்தனர்.
டபுள் ஆக்சனில் அர்ஜூன்தாஸ்: குட் பேட் அக்லி படம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருப்பதாகவும் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இப்படத்தில் சிம்ரன் ஒரு பக்கம் கேமியோ ரோலில் கலக்கியிருந்தாலும் அஜித்தை அர்ஜூன் தாஸ் தூக்கி சாப்பிட்டு விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அஜித் டபுள் ஆக்சன் செய்து பார்த்திருப்போம். ஆனால், இப்படத்தில் அர்ஜூன் தாஸ் அஜித்திற்கு எதிராக டபுள் ஆக்சனில் கலக்கியிருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். ஒத்த ரூபா பாடலுக்கு அவர் போட்டிருக்கும் நடனம் வேற லெவலில இருப்பதாகவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். அருண் விஜய்க்கு என்னை அறிந்தால் போன்று அர்ஜூன் தாஸிற்கு குட் பேட் அக்லி ஒரு நல்ல பெயரை பெற்று தந்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ரசிகர்களுடன் அஜித்?: நடிகர் அஜித் குட் பேட் அக்லி படத்தை ரசிகர்களுடன் பார்ப்பது போன்ற வீடியோ வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்த வீடியோவில் இருப்பவர் அஜித் இல்லை. அஜித் கெட்டப்பில் ரசிகர் ஒருவர் வந்துள்ளார். பார்க்க அச்சு அசல் அஜித்தை போன்று இருப்பதால் அவரை அஜித்தே கடவுளே என திரையரங்கில் கூச்சலிட்டனர். மேலும், அஜித் வந்திருக்கிறார் என நம்பிவிட்டதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். எது எப்படியோ எங்களுடன் அஜித் வந்து படத்தை பார்த்தது போன்ற உணர்வை தான் தந்திருக்கிறது. அவர் வந்திருந்தால் திரையரங்கிற்குள் பட்டாஸ் தான் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
அஜித் தந்த சர்ப்ரைஸ்: குட் பேட் அக்லி திரைப்படம் வெளியான முதல் நாளே ரூ.28 கோடிக்கு மேல் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில, நடிகர் அஜித் கார் பந்தயத்திற்கு தயாராகி வரும் வீடியோவை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். இதில், இதுதான் அஜித்தின் கோர் ஆக இருக்கிறது. இதை பற்றி உங்களது கருத்து என்ன என்பது போல் வீடியோவை வெளியிட்டுள்ளார். தற்போது ஜிடி4 யூரோபியன் சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துக் கொள்ளவுள்ளார். இவர் ரேசிற்கு தயாராகும் வீடியோவை இணையத்தில் அஜித்தின் நிறுவனம் வெளியிட்டிருந்தது. அதேபோன்று சுரேஷ் சந்திரா புதிய வீடியோவை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











