டிரெண்டிங்கில் ஆட்சி செலுத்தும் அஜித்...கொண்டாடும் ரசிகர்கள்

சென்னை : அஜித்தின் 51வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை சோஷியல் மீடியாக்களில் ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர். அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை ரசிகர்கள் குவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் நடிகர் அஜித். எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி - கமலுக்கு பிறகு டாப் ஹீரோ ரேஞ்சில் கொண்டாடப்படுபவர் அஜித். ஓப்பனிங் டே வசூல் கிங் என்றும் ரசிகர்கள் அஜித்தை கொண்டாடி வருகின்றனர்.

அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்

அஜித் பிறந்தநாள் கொண்டாட்டம்

அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரியான அஜித், இன்று 60 க்கும் அதிகமான படங்களில் நடித்து விட்டார். தற்போது ஏகே 61, ஏகே 62 என வரிசையாக பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில் அவரது 51 வது பிறந்தநாளை ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் ஆகியோர் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர்.

 டிரெண்டில் தெறிக்க விடும் ரசிகர்கள்

டிரெண்டில் தெறிக்க விடும் ரசிகர்கள்

அஜித்தின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக #AjithKumar, #AK, #AK61, #AK 62, #AK63, #HBDAjithkumar என பல ஹேஷ்டேக்குகள் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளன. இதில் அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவதுடன், அஜித்தின் பழைய, அரிய போட்டோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

எதுவும் வேணாம்ப்பா

எதுவும் வேணாம்ப்பா

பல வருடங்களுக்கு முன்பே ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். தீனா படத்திற்கு பிறகு இவரை ரசிகர்கள் அன்பாகவும், கெத்தாகவும் தல என கூப்பிட்டு வந்தனர். ஆனால் அதையும் கடந்த ஆண்டு இறுதியில் வேண்டாம் என மறுத்து விட்டார் அஜித். தன்னை யாரும் இனி தல என குறிப்பிட வேண்டாம் என்றும், அஜித்குமார் அல்லது ஏகே என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என ரசிகர்கள், மீடியாக்களுக்கு அன்பான வேண்டுகோளை வைத்தார் அஜித்.

விடாமல் கொண்டாடும் ரசிகர்கள்

விடாமல் கொண்டாடும் ரசிகர்கள்

இருந்தாலும் தற்போது வரை அஜித் மீதான பாசம், அவருக்கு இருக்கும் ஸ்டார் அந்தஸ்து கொஞ்சமும் குறையவில்லை. மாறாக, அஜித்தை ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். தற்போதைய சூழலில் அஜித் படங்களால் மட்டுமே வசூல் சாதனை படைக்க முடியும் என ரசிகர்கள் நம்புகிறார்கள். இதனால் அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X