என்ன திடீர்னு.. ஒன்று கூடிய தல தளபதி ரசிகர்கள்.. டிரெண்டாகும் #AjithVijayPRIDEOfINDIA

சென்னை: சமூக வலைதளங்களில் இவர்களை விட கோபத்தை காட்டவும் ஆளில்லை.. பாசத்தை பொழியவும் யாருமே கிடையாது என்றே சொல்லலாம்.

Recommended Video

புரட்சித் தலைவர் விஜய், புரட்சித் தலைவி சங்கீதா.. மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

ட்விட்டர் இந்தியாவுக்கே அதிக வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் மிகப்பெரிய தூண்களாக இருக்கும் தல தளபதி ரசிகர்கள், தற்போது திடீரென ஒன்று சேர்ந்துள்ளனர்.

நம்ம கண்ணையே நம்ப முடியலயே என்ற அளவுக்கு #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்தியாவின் பெருமை

இந்தியாவின் பெருமை

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் இந்தியாவின் பெருமை என #AjithVijayPRIDEOfINDIA என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் இணைந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். விஜய், அஜித்தின் புகைப்படங்களை ஒன்றாக இணைத்தும், அவர்கள் ஒன்றாக இருக்கும் அரிய புகைப்படங்களை பகிர்ந்தும் இந்த ஹாஷ்டேக்கை தெறிக்கவிடுகின்றனர்.

தியேட்டரில் தான்

தியேட்டரில் தான்

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகாமல், ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாக உள்ள நிலையில், மாஸ்டர் படமும் வலிமை படமும் நிச்சயம் தியேட்டரில் தான் ரிலீஸ் ஆகும் என்றும், பாலிவுட் நடிகர்கள் கூட ஒடிடிக்கு வந்தாலும், ஹாலிவுட் நடிகர்கள் பாணியில் தியேட்டர்களில் படங்களை ரிலீஸ் செய்யவே இருவரும் விரும்புவதாகவும், ரசிகர்களை மதிப்பதாகவும் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்கின்றனர்.

ஆச்சர்யப்படுத்தும் ரசிகர்கள்

ஆச்சர்யப்படுத்தும் ரசிகர்கள்

ஆன்லைனில் அடித்துக் கொண்டு, அந்த ஹீரோவை இந்த ஹீரோ ரசிகர்கள் கேவலமாகவும், இந்த ஹீரோ ரசிகர்களை அந்த ஹீரோவை கேவலப்படுத்தியும் ட்விட்டர் வார் நடத்தி வந்த நிலையில், இன்று திடீரென இருவரது ரசிகர்களும் ஒன்றாக இணைந்து இப்படியொரு டேக்கை டிரெண்ட் செய்வது, பலருக்கும் ஆச்சர்யத்தையும், சந்தோஷத்தையும் கொடுத்து வருகிறது.

லைஃப் டைம் செட்டில்மென்ட்

லைஃப் டைம் செட்டில்மென்ட்

மேலும், இதை விட சிறந்த டேக்கை காட்டுறவங்களுக்கு லைஃப் டைம் செட்டில்மென்ட் என கைதி படத்தில் வில்லன் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசும் மாஸ் வசனத்தையும் மீமாக போட்டு வைரலாக்கி வருகின்றனர். அஜித், விஜய் ரசிகர்கள் தான் தமிழ் சினிமாவையும் தியேட்டர் அதிபர்களையும் வாழ வைத்து வருவதாகவும், அதே நிலை எப்போதுமே தொடரும் என்றும் ட்வீட்கள் பறக்கின்றன.

விஜய் மகன் பிறந்தநாள்

விஜய் மகன் பிறந்தநாள்

இப்படி திடீரென இந்த டேக் டிரெண்டாக இன்னொரு முக்கிய காரணமும் இருக்கிறது. நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு இன்று 20வது பிறந்தநாள். நடிகர் விஜய் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் களை கட்டி வரும் நிலையில், விஜய், அஜித் ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்ளாமல், பாசிட்டிவ் டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். ஹேப்பி பர்த்டே இளைய தளபதி.

ரெண்டா வருவேன் டா

ரெண்டா வருவேன் டா

இந்த எடிட் வேற லெவல் வெறித்தனம் என்றே சொல்லலாம். அந்தளவுக்கு தல தளபதியை ஒன்றாக இணைத்து கெத்து காட்டி வருகின்றனர் ரசிகர்கள். இதே ஒற்றுமை எப்போதுமே இருந்தால், உங்களை யாருமே அசைக்கவே முடியாது என்றும் பல பிரபலங்கள் மற்றும் சினிமா நிபுணர்கள் கருதி வருகின்றனர். "அழிக்க நினைச்சா ரெண்டா வருவேன் டா"!

அதுமட்டும் நடந்தா

அதுமட்டும் நடந்தா

ராஜாவின் பார்வையிலே எனும் படத்தில் தல மற்றும் தளபதி இணைந்து நடித்துள்ளனர். ஆனால், இப்போ இவர்கள் இணைந்து ஒரு படம் நடித்தால், அது நிச்சயம் இந்தியளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்‌ஷனை உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் அந்த படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கினால் கொல மாஸாக இருக்கும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X