GOAT படத்தின் மெயின் வில்லன் இவரா?.. என்ன ஏற்கனவே வந்த படத்தின் வாடை அடிக்குது?

சென்னை: லியோ படத்தில் நடித்து முடித்திருக்கும் விஜய் தற்போது GOAT படத்தில் நடித்துவருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை விஜய்யும், விஜய்யின் ரசிகர்களும் ரொம்பவே எதிர்பார்த்திருக்கின்றனர். ஏனெனில் இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பந்தயம் அடிக்க வேண்டும் என்பதில் தீவிர முனைப்போடு இருக்கிறார்கள்.

லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானபோது ரசிகர்கள் பலரும் உச்சக்கட்ட ஆச்சரியம் அடைந்தனர். வெங்கட் பிரபு முதன்முதலாக விஜய்யுடன் சேர்ந்திருக்கிறாரே எந்த மாதிரியான படத்தை எடுக்கப்போகிறார்; படத்துக்கு அவர் வைக்கும் பெயர் வித்தியாசமாக இருக்கும் என்பதால் படத்தின் பெயர் என்னவாக இருக்கும் போன்ற எக்கச்சக்க எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர்.

Ajmal is the Main Villain in VIjay GOAT Movie

GOAT: அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்படியாக படத்தின் பெயர் GOAT என்று வைக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த வார்த்தை புழக்கத்தில் இருக்கிறது. லெஜெண்ட்களை Greatest Of The All Time என்று அழைப்பார்கள். எனவே இந்தப் படத்தின் பெயர் பெரும் வரவேற்பை பெற்றது. சென்னையில் பூஜை போட்டு பாடல் காட்சியுடன் ஷூட்டிங் தொடங்கியது. அந்தப் பாடலை மதன் கார்க்கி எழுத; ராஜுசுந்தரம் நடனம் அமைக்க, விஜய், பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் நடனமாடியதாக கூறப்படுகிறது.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், மைக் மோகன், வைபவ், பிரேம் ஜி அமரன், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. பிரசாந்த்தும், மைக் மோகனும் நீண்ட காலம் கழித்து GOAT படத்தின் மூலம் தமிழில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார்கள். எனவே அவர்கள் விஜய்யுடன் எப்படி நடித்திருப்பார்கள் என்பதை பார்ப்பதற்கும் ஆவலோடு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

விறுவிறுப்பான ஷூட்டிங்: சென்னையில் தொடங்கிய ஷூட்டிங் அடுத்ததாக தாய்லாந்தில் நடந்தது. அங்கு முக்கியமான ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கினார்கள். அதனையடுத்து துருக்கி சென்ற படக்குழு தற்போது இலங்கையில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிட வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக புதிய தகவல் ஒன்று கடந்த சில நாட்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.

டபுள் ரோல்: GOAT டைம் ட்ராவல் ஜானரில் உருவாவதாக கூறப்படுகிறது. இதில் மொத்தம் இரண்டு விஜய்கள் என்றும் அதில் அப்பா விஜய்க்கு நண்பர்களாக பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் உள்ளிட்டோர் வருவார்கள் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. படத்தின் போஸ்டர்கள் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரிசையாக வெளியாகிக்கொண்டிருந்தன. ஒரு போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன்; விஜய், பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் வரும்படியான ஸ்டில் பலரையும் ரசிக்க வைத்தது.

மெயின் வில்லன்: இந்நிலையில் GOAT படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அப்பா விஜய்க்கு நண்பராக வரும் அஜ்மல்தான் மெயின் வில்லனாக இருப்பார் என்று சொல்லப்படுகிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்ன கோ பட வாடை அடிக்குது என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். அதாவது கோ படத்திலும் ஜீவாவுக்கு நண்பராக இருந்து பிறகு வில்லனாக மாறுவார் அஜ்மல் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X