AK 61 இறுதிக்கட்ட ஷுட்டிங்கிற்கு தயாரான அஜித்...ட்விட்டரில் தீயாய் பரவும் போட்டோ

சென்னை : நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து ஹெச்.வினோத் - அஜித் - போனி கபூர் காம்போ மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ஏகே 61. இந்த படத்தின் ஷுட்டிங் கிட்டதட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

ஜிப்ரான் இசையில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம்சிட்டியில் ஒரு மாதத்திற்குள் மேலாக தொடர்ந்து நடத்தப்பட்டது. அதன் பிறகு ஜுன் மாதத்தில் புனேயில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் அதற்குள் அஜித் ஃபாரின் டூர் புறப்பட்டு சென்றார். இந்த கேப்பில் அஜித் தவிர மற்ற நடிகர், நடிகைகளை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை டைரக்டர் வினோத் எடுத்து முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.

அடுத்தடுத்து பிஸியாகும் அஜித்

அடுத்தடுத்து பிஸியாகும் அஜித்

அஜித், இந்தியா திரும்பியதும் ஏகே 61 ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என்று பார்த்தால் அவர் துப்பாக்கி சுடுதல் பயிற்சி, போட்டி என சென்று விட்டார்.இதற்கிடையில் சென்னையில் எடுக்கப்பட்ட சில ஸ்டன்ட் சீன்களால் அஜித் ஷுட்டிங்கில் கலந்து கொள்வார் என அவர் பார்க்க கூட்டம் கூடிய வீடியோக்கள் வெளியாகின. ஹெச்.வினோத்தும் வடசென்னையில் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போட்டோக்கள் வெளியாகி பரபரப்பாகின.

ஏகே 61 அடுத்தகட்ட ஷுட்டிங்

ஏகே 61 அடுத்தகட்ட ஷுட்டிங்

ஏகே 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னையில் துவங்கப்பட உள்ளதாக சொல்லப்பட்டது. அதில் படத்தில் லீட் ரோலில் நடிக்கும் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது.செப்டம்பர் மாதத்திற்குள் ஷுட்டிங்கை முடித்து, ஏகே 61 படத்தை டிசம்பர் அல்லது ஜனவரியில் பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஒரு அப்டேட் கூட இல்லையே

ஒரு அப்டேட் கூட இல்லையே

ஆனால் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட்டது முதல் இதுவரை ஒரு அப்டேட்டை கூட தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிடவில்லை. கடைசியாக ஷுட்டிங் துவங்குவதற்கு முன் அஜித்தின் பிளாக் அன்ட் ஒயிட் நெகடிவ் இமேஜ் ஒன்றை மட்டும் ட்விட்டரில் பகிர்ந்தார். இதனால் படத்தில் அஜித் நெகடிவ் ரோலில் நடிப்பதாக தகவல் பரவியது. ஆனால் அது உண்மை தானா என போனி கபூர் ஏதும் சொல்லவில்லை.

எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்

எதிர்பார்த்து ஏமாந்த ரசிகர்கள்

மறைந்த தனது காதல் மனைவி ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக தகவல் பரவியதால் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அப்படி எந்த அறிவிப்பு வெளியிடாததால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். இதற்கிடையில் மற்றொரு தகவலாக ஏகே 61 படத்திற்கு 'வல்லமை' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஏகே 61 இறுதிக்கட்ட ஷுட்டிங்

ஏகே 61 இறுதிக்கட்ட ஷுட்டிங்

ஏகே 61 படத்தின் அடுத்த கட்ட ஷுட்டிங் சென்னையில் நடக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏகே 61 படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங் விசாகப்பட்டினத்தில் இன்று துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அஜித், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம் புறப்பட்டு சென்றுள்ளார்.

தீயாய் பரவும் அஜித் போட்டோ

தீயாய் பரவும் அஜித் போட்டோ

அஜித், சென்னை விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள் ட்விட்டரில் தீயாய் பரவி வருகிறது. #AK61, #Ajithkumar போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகி வருகின்றன. ரசிகர்கள் அஜித்துடன் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், செல்ஃபிக்களை அதிகம் வகிர்ந்து வருகின்றனர்.

வேறு லுக்கிற்கு மாறலியா?

வேறு லுக்கிற்கு மாறலியா?

ஐரோப்பா டூர் முடித்து வந்ததும் அஜித் புதிய லுக்கிற்கு மாற உள்ளதாகவும், அந்த லுக்கில் தான் க்ளைமாக்சில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள போட்டோவில் அஜித் அதே நரைத்த தாடியுடன் இருக்கும் லுக்கில் தான் காட்சி அளிக்கிறார். இதனால் என்ன பிளான் வைத்திருக்கிறார்கள் என புரியாமல் ரசிகர்கள் குழப்படைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X