என்ன ஹெச்.வினோத் இப்படி ஆகிட்டாரு...ஏகே 61 ஷுட்டிங் ஸ்பாட் போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்
சென்னை : அஜித் நடிக்கும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாதத்தில் மொத்த ஷுட்டிங்கையும் முடித்து விட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இறுதிக்கட்ட ஷுட்டிங் புனேயில் விரைவில் துவங்கப்பட உள்ளதாகவும், இதற்கான செட் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்த செட்டில் தான் க்ளைமாக்ஸ் உள்ளிட்ட முக்கிய சீன்கள் எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்து டைரக்டர் ஹெச்.வினோத்தின் போட்டோக்கள் ரசிகர்களால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.நடிகர் அஜித்குமார்- ஹெச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்றது.
இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த ஏகே 61 படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். வீரா, ராஜ தந்திரம் மற்றும் நடுநிசி நாய்கள் படத்தில் நடித்தவர்.
நடிகர் ஜி.எம். சுந்தரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித் படத்தில் இரண்டாவது முறையாக ஜி.எம்.சுந்தர் நடிக்கிறார். ஜி.எம். சுந்தர், சார்பட்டா பரம்பரை படத்தில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்தவர். ஜி.எம்.சுந்தர், வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக ஐஜி வேடத்தில் அரசு என்ற கேரக்டரில் நடித்தவர்.
ஏகே 61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐதராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். ஏகே 61 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது.
இந்நிலையில் படப்பிடிப்பில் ரசிகர் ஒருவருடன் இயக்குநர் ஹெச்.வினோத் எடுத்த புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தில் வினோத் வேட்டி - சட்டை அணிந்து, பரட்டை தலை, தாடியுடன் ஒரு சாதாரண ஆளை போல காட்சியளிக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள், என்ன இவர் இப்படி ஆகிட்டார் என ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











