ஏகே 61 டீம் ரெடி...மொத்த விபரத்தையும் வெளியிட்ட ஹெச்.வினோத்
சென்னை : ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அஜித்தின் ஏகே 61 படம் பற்றிய முழுவிபரத்தையும் டைரக்டர் ஹெச்.வினோத் வெளியிட்டுள்ளார். படத்தின் மொத்த டீமின் விபரத்தையும் தற்போதே வெளியிட்டு விட்டதால் ரசிகர்கள் ஆச்சரியத்துடன் படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
வலிமை படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அஜித்தின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இதில் போனி கபூர், அஜித், ஹெச்.வினோத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ள ஏகே 61 படம் தான் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுவது.

போனி கபூர் போட்ட கன்டிஷன்
சமீபத்தில் ஏகே 61 பூஜை ஐதராபாத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஏகே 61 படத்தின் ஷுட்டிங் இன்று முதல் ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் துவங்கப்பட உள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தின் ஷுட்டிங்கை முடிக்க போனி கபூர் கூறி விட்டாராம். தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதே போல், வலிமை படத்தை போல் ஏகே 61 படத்திற்கு ரசிகர்களை அப்டேட் கேட்க வைக்க கூடாது என கன்டிஷன் போட்டுள்ளாராம்.

அஜித் ரோல் இது தானா
ஏகே 61 படத்தில் ஹீரோ-வில்லன் என இரட்டை வேடத்தில் அஜித் நடிக்கிறாராம். பேங்க் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹீரோ அஜித், காலேஜ் ப்ரொஃபசராக நடிக்கிறாராம். இவருக்கு எப்படி வங்கியுடன் தொடர்பு ஏற்படுகிறது என்பது தான் கதையாம். வலிமை படத்தை போல் இல்லாமல் இந்த படத்தில் மிக குறைந்த ஆக்ஷன் காட்சிகளே உள்ளதாம். அதே சமயம் மாஸ், த்ரில்லிங் போன்ற காட்சிகள் அதிகம் உள்ளதாம்.

படக்குழு விபரம்
இன்று ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதை முன்னிட்டு படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய முழு விபரத்தையும் படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன் விபரம் இதோ :
தயாரிப்பாளர் - போனி கபூர்
எழுத்து, இயக்கம் - ஹெச்.வினோத்
ஒளிப்பதிவு - நிரவ் ஷா
இசை - ஜிப்ரான்
எடிட்டர் - விஜய் வேலுக்குட்டி
ஸ்டன்ட் - சுப்ரீம் சுந்தர், திலீப் சுப்பராயன்
எக்சிக்யூட்டிவ் ப்ரொட்யூசர் -ஜெயராஜ் பிச்சை
ப்ரொடக்ஷன் கன்ட்ரோலர் - எஸ்.பி.சொக்கலிங்கம்
டப்பிங் இன்ஜினியர் - ஜெகன் (ஏவிஎம் ஸ்டூடியோ)
டிஐ கலரிஸ்ட் - கே.எஸ். ராஜசேகரன்
சவுண்ட் எஃபெக்ட்ஸ் - சினிக் சினிமாஸ் (சச்சின் சுதாகரன்)
ஃபைனல் மிக்சிங் - எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன்
விஎஃப்எக்ஸ் சூப்பர்வைசர் - செல்வ குமார்
போஸ்டர் டிசைனர் - கோபி பிரசன்னா
கோ டைரக்டர் - சமீர் உல்லா

ஜிப்ரான் செம ஃபாஸ்ட்
ஏகே 61 படத்திற்காக ஜிப்ரான் ஏற்கனவே 2 பாடல்களை தயார் செய்து விட்டாராம். பேக்கிரவுண்ட் மியூசிக் பணிகளை விரைவில் துவங்க போகிறாராம். தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை ஒருவரிடம் ஹீரோயினாக நடிக்க பேசப்பட்டு வருகிறதாம். விரைவில் ஹீரோயின், படத்தின் டைட்டில் பற்றிய தகவல் வெளியிடப்பட உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











