twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உண்மை சம்பவ அடிப்படையில் ஏகே 61... படத்தின் கதை இது தான்

    |

    சென்னை : டைரக்டர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ஏகே 61 படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையிலானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றியை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் இணைந்துள்ள படம். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏகே 61 படத்தின் ஷுட்டிங் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் நடத்தப்பட்டு வந்தது.

    வலிமை படம் ரிலீசாவதற்கு முன்பே ஏகே 61 படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்தின் பூஜை ஏப்ரல் மாதம் நடைபெற்றது. இந்த படத்தில் ஜான் கொக்கென், வீரா, சமுத்திரக்கனி, மஞ்சுவாரியர் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.

    ப்பா.. எப்படி இருக்காரு பாருங்க.. திடீரென ரஜினிகாந்தை சந்தித்த ஷங்கர்.. என்ன விஷயம் தெரியுமா? ப்பா.. எப்படி இருக்காரு பாருங்க.. திடீரென ரஜினிகாந்தை சந்தித்த ஷங்கர்.. என்ன விஷயம் தெரியுமா?

    பல பாதுகாப்புடன் ஷுட்டிங்

    பல பாதுகாப்புடன் ஷுட்டிங்

    ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் ஒரு மாதத்திற்கும் மேலாக இரவு பகலாக ஏகே 61 ஷுட்டிங் நடத்தப்பட்டது. இதற்காக சென்னை மவுண்ட் ரோட் போன்று 9 ஏக்கரில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. இதில் ஆரம்பத்தில் அஜித் மட்டும் நடித்து வந்தார். பலத்த பாதுகாப்புடன் ஏகே 61 ஷுட்டிங் நடைபெற்றது.

    அஜித்தின் ரோல் இது தான்

    அஜித்தின் ரோல் இது தான்

    படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒன்று நெகடிவ் ரோல் என்பது உள்ளிட்ட பல தகவல்கள் வெளியிடப்பட்டன. ஆனால் அவை உண்மையில்லை. அஜித், இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை. அதற்கு பதிலாக இரண்டு விதமாக கெட்அப்களில் நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதில் ஒன்று வயதான காலேஜ் ப்ரொஃபசர் ரோல் ஆகும்.

    இவரும் படத்தில் நடித்துள்ளாரா

    இவரும் படத்தில் நடித்துள்ளாரா

    தொடர்ச்சியாக 47 நாட்கள் ஐதராபாத்தில் ஷுட்டிங்கை முடித்த படக்குழு, இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை புனேயில் இன்று துவக்குகிறது. இதைத் தொடர்ந்து சென்னையிலும் ஷுட்டிங் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் டிவி செய்திவாசிப்பாளர் மெர்சி சித்ராவும் ஏகே 61 படத்தில் நடித்துள்ளார் சமீபத்தில் தகவல் வெளியிடப்பட்டது

    என்னது ஷுட்டிங் முடிச்சுட்டாங்களா

    என்னது ஷுட்டிங் முடிச்சுட்டாங்களா

    இதுவரை வெளியான தகவலின்படி ஏகே 61 படத்தின் 80 சதவீதம் ஷுட்டிங் முடிவடைந்து விட்டதாம். இன்னும் 10 முதல் 15 நாட்கள் வரையிலான ஷுட்டிங் மட்டுமே மீதம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜுலை மாதத்திற்குள் திட்டமிட்டபடி ஏகே 61 ஷுட்டிங் முடிக்கப்பட்டு போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் துவங்கப்பட உள்ளது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

    உண்மை சம்பவ அடிப்படையிலான கதை

    உண்மை சம்பவ அடிப்படையிலான கதை

    லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் ஏகே 61 படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாம். இந்த படத்தின் கதைக்காக ஹெச்.வினோத் பல ஆய்வுகளை மேற்கொண்டாராம். சமீப காலத்தில் நடந்த வங்கி கொள்ளை சம்பவங்களை அடிப்படையாக வைத்து, அதை ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் திரைக்கதையாக மாற்றி உள்ளாராம்.

    Recommended Video

    தல அஜித் கூட படம் பண்ணனும் | தமிழ் Youngest Director| Sona Sokkama- First Single
    இது தான் ஏகே 61 கதை

    இது தான் ஏகே 61 கதை

    மவுண்ட் ரோட்டில் உள்ள வங்கிக் கிளை ஒன்றில் நடக்கும் மிகப் பெரிய அளவிலான கொள்ளை சம்பவம். இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடக்கிறது. இந்த சம்பவத்தோடு அஜித் கேரக்டர் எந்த வகையில் சம்பந்தப்படுகிறது என்பது தான் ஏகே 61 படத்தின் கதையாம். ஏகே 61 படத்தில் பாடல்களே இல்லையாம். அதற்கு பதிலாக இரண்டு தீம் டிராக் மட்டும் அமைக்கப்பட்டுள்ளதாம்.

    English summary
    According to sources, AK 61 story was based on real life story of bank robbery. How the robbery happened, what happened in the bank, how Ajith character will connected to this incident is the story of the film. Director H.Vinod undergone so many researches to make this story.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X