ஏகே 61 அப்டேட்...அஜித்திற்கு ஜோடி இவரா....22 ஆண்டுகளுக்கு பின் அஜித் படத்தில் இணையும் நடிகை
சென்னை : பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் அஜித்தின் ஏகே 61 படத்தில் முக்கிய ரோல் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இவர் அஜித்திற்கு ஜோடியாக நடிக்க போகிறாரா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து ஹச்.வினோத், அஜித், போனி கபூர் இணைந்துள்ள படம் ஏகே 61. அஜித்தின் 61 வது படமாக உருவாக உள்ள இந்த படத்தின் ஷுட்டிங் வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முன் வலிமை படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரெடியாகும் பிரம்மாண்ட செட்
வலிமை படம் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தாமதமானதால், ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கை 7 மாதங்களில் நடத்தி முடிக்க போனி கபூர் கூறி உள்ளாராம். முதல் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் துவங்க உள்ளதாகவும், அதைத் தொடர்ந்து புதுச்சேரி, ராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் ஷுட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்ட செட் தயாராகி வருகிறதாம்.

2022 ஏகே தீபாவளியா
விரைவில் படத்தின் பெயரும் வெளியிடப்பட உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. 7 மாதங்களில் ஷுட்டிங்கை முடிக்க வேண்டும் என போனி கபூர் கூறி உள்ளதால் ஏகே 61 இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் ஆக்ஷன் படம் தான் என்கிறார்கள். இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட தேர்வு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இவர் அஜித்திற்கு ஜோடியா
இந்நிலையில் முக்கிய அப்டேட்டாக இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகையான தபு மிக முக்கியமான ரோலில் நடிக்க போகிறாராம். ஏகே 61 படத்தில் அஜித், ஹீரோ - வில்லன் என இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால் ஒரு அஜித்திற்கு இவர் ஜோடியாக நடிக்க போகிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

22 ஆண்டுகளுக்கு பின் அஜித் படத்தில்
தபு, இதற்கு முன் 2000 ம் ஆண்டு ரிலீசான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தபு நடித்திருந்தார். முதலில் இவர்களின் ஜோடி கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், இந்த படம் செம ஹிட் ஆனது. மம்முட்டி, ஐஸ்வர்யா ராய், ஷாமிலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அஜித் படத்தில் இணைய உள்ளார் தபு.


Click it and Unblock the Notifications











