AK 62: ஏது... 45 நாள்ல ஏகே 62 ஷூட்டிங்கா..? அஜித் கேரியர்ல இதுதான் ஃபர்ஸ்ட் டைம் வேறயாமே!

சென்னை: துணிவு வெற்றியைத் தொடர்ந்து அடுத்து ஏகே 62 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் அஜித்.

விக்னேஷ் சிவன் நீக்கம், அஜித் தந்தையின் மறைவு போன்றவற்றால் ஏகே 62 அப்டேட் இன்னும் வெளியாகவில்லை என சொல்லப்படுகிறது.

அதேநேரம், லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளது மட்டும் உறுதி என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ஏகே 62 படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்க் பணிகளை முடித்துவிட்ட மகிழ் திருமேனி, ஷூட்டிங் ஷெட்யூலையும் பக்காவாக செட் செய்துவிட்டாராம்.

 AK 62: Ajiths AK 62 shooting will be done in a total of 45 days

ஏகே 62 ஷூட்டிங் அப்டேட்: அஜித்தின் ஏகே 62 அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். பொங்கல் ஸ்பெஷலாக வெளியான துணிவு அஜித் கேரியரில் தரமான ஹிட் படமாக அமைந்தது. இதனால், ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துவிட்டது. இதனிடையே இந்தப் படத்தில் இயக்குநராக கமிட் ஆகியிருந்த விக்னேஷ் சிவன் விலக, தற்போது மகிழ் திருமேனி உள்ளே வந்துள்ளார்.

விக்னேஷ் சிவனின் திடீர் நீக்கம், அஜித் தந்தையின் மறைவு போன்றவற்றால் இன்னும் ஏகே 62 அப்டே வெளியாகவில்லை என சொல்லப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தின் அப்டேட் பிப்ரவரியில் வெளியாகும் என்றும், படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல், மகிழ் திருமேனி திடீரென தான் இந்தப் படத்தில் கமிட் ஆனார். அதனால், ஸ்க்ரிப்ட் வேலைகளை முடிக்க அவருக்கும் டைம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அதன்படி, மகிழ் திருமேனி தற்போது ஏகே 62 ஸ்க்ரிப்ட் வேலைகளை முழுவதுமாக முடித்துவிட்டாராம். அதுமட்டும் இல்லாமல் படப்பிடிப்புக்கான மொத்த ஷெட்யூலையும் பக்காவாக செட் செய்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரேநாளில் வெளியாகி ஹிட் அடித்தன. அதேபோல், தற்போது விஜய்யின் லியோ படத்துடன் ஏகே 62 ரிலீஸாக வேண்டும் என அஜித் விருப்பம் தெரிவித்துள்ளார்.

 AK 62: Ajiths AK 62 shooting will be done in a total of 45 days

ஆனால், இனி அதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றாலும், மகிழ் திருமேனி வேறுமாதிரியாக ப்ளான் செய்துள்ளாராம். வழக்கமாக படப்பிடிப்பை ரொம்பவே பொறுமையாக நடத்துவார் மகிழ் திருமேனி. ஆனால், ஏகே 62 படப்பிடிப்பை மொத்தமே 45 நாட்களில் முடித்துவிட திட்டமிட்டுள்ளாராம். ஸ்க்ரிப்ட்டில் சீன் பை சீன் எல்லாவற்றையும் தெளிவாக எழுதிவிட்டதால், ஓவர் கான்ஃபிடன்ட்டாக முடிவெடுத்துள்ளார் மகிழ் திருமேனி.

மேலும், ஏகே 62 ஷூட்டிங் முழுவதையும் வெளிநாட்டில் படமாக்கவும் மகிழ் திருமேனி ப்ளான் செய்துள்ளாராம். லைகா தரப்பில் இருந்தும் இதற்கு க்ரீன் சிக்னல் கிடைத்துவிட்டதால், மகிழ் திருமேனி தீயாக வேலை பார்த்து வருகிறார். மொத்த ஷூட்டிங்கையும் 45 நாட்களில் முடித்துவிட்டு, உடனடியாக போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் தொடங்க ப்ளான் செய்துள்ளார்களாம். அஜித் கேரியரில் முதன்முறையாக ஒரு படம் மிகக் குறுகிய நாட்களில் படமாக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து விரைவில் ஏகே 62 டைட்டில் டீசர் வெளியாகவுள்ளதாம். அஜித்தின் பிறந்தநாள் தினமான மே 1ம் தேதி இந்த அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் மோஷன் போஸ்டரையும் அவரது பிறந்தநாளிலேயே வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X