சத்தமில்லாமல் நடந்த ஏகே 62 பட பூஜை.. இணையத்தில் டிரெண்டாகும் இயக்குநர் மகிழ் திருமேனி!

சென்னை: லைகா தயாரிப்பில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள ஏகே 62 படத்தின் பூஜை திங்கட்கிழமை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏகே 62 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஏகப்பட்ட மாற்றங்களும், நீக்கங்களும், வெளிநடப்புகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஒரு வழியாக அனைத்து பஞ்சாயத்துக்களும் முடிவுக்கு வந்து படத்தின் பூஜையை போட்டு விட்டதாக கூறுகின்றனர்.

ஏகே 62 பூஜை

ஏகே 62 பூஜை

ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ் அறிவிப்பு எப்போ வரும் என எதிர்பார்த்து எதிர்பார்த்தே அஜித் ரசிகர்கள் டயர்ட் ஆகி விட்டனர். ஆனால், இதுவரை அந்த படத்தின் எந்தவொரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில், சென்னையில் நேற்று அஜித்தின் ஏகே 62 படத்தின் பூஜை சத்தமே இல்லாமல் நடைபெற்று விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்க்காக காத்திருந்து

விஜய்க்காக காத்திருந்து

மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் மகிழ் திருமேனி நீண்ட காலமாக நடிகர் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என முயற்சியில் இருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. விக்னேஷ் சிவன் வெளியேறிய நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் மிகப்பெரிய ஜாக்பாட் மகிழ் திருமேனிக்கு அடித்துள்ளது.

டிரெண்டிங்கில் மகிழ் திருமேனி

டிரெண்டிங்கில் மகிழ் திருமேனி


ஏகே 62 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், #MagizhThirumeni ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர். விரைவில் அஜித்தின் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

ஏகே 62 டீம் இதுதான்

ஏகே 62 டீம் இதுதான்

அஜித்தின் ஏகே 62 படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார் என்றும் மகிழ் திருமேனி இயக்க அனிருத் இசையமைக்கப் போகிறார் என்றும் இதுவரை அப்டேட்கள் கசிந்துள்ளன. பட பூஜை வீடியோவுடன் மார்ச் முதல் வாரத்தில் ஏகே 62 படம் குறித்த அதிரடியான பல அப்டேட்கள் லியோ படத்தின் அப்டேட்கள் வரிசை கட்டி வெளியானதை போல வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லன் விக்டர்

வில்லன் விக்டர்

என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிய நடிகர் அருண் விஜய் தான் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களில் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து மகிழ் திருமேனி இயக்கி உள்ள நிலையில், நிச்சயம் இந்த காம்போ மீண்டும் அரங்கேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

த்ரிஷாவுக்கு சான்ஸ்

த்ரிஷாவுக்கு சான்ஸ்

ஏகே 62 படத்தில் இருந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியேற்றப்பட்ட நிலையில், நடிகை த்ரிஷா அஜித்தின் 62வது படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. த்ரிஷா இல்லைன்னா ஐஸ்வர்யா ராய் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். மார்ச் மாதம் ரசிகர்களின் எல்லா கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X