லியோவை மிஞ்சும் சர்ப்ரைஸ்.. ஏகே 62 டீம் போடும் மாஸ்டர் பிளான்.. காதலர் தினத்தில் காத்திருக்கு?

சென்னை: ஏகே 62 படத்தின் இயக்குனர் யார் என்கிற அறிவிப்பை வெறும் போட்டோ மட்டும் வெளியிட்டு அறிவிக்க வேண்டாம் என்கிற முடிவு செய்தது தான் அந்த அப்டேட் வெளியாக தாமதம் ஆகிறது என்கின்றனர்.

நடிகர் அஜித் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் ஜனவரி 11ம் தேதி வெளியான துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களும் நல்ல வசூலை ஈட்டி உள்ளது.

ஓடிடியில் நேற்று வெளியான துணிவு படத்திற்கும் நெட்பிளிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

விக்னேஷ் சிவன் வெளியே

விக்னேஷ் சிவன் வெளியே

துணிவு படத்தைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் அஜித் நடிக்க உள்ள ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் விக்னேஷ் சிவன் கதை பிடிக்காததால் ஏகே 62 படத்தில் இருந்து அவர் அதிரடியாக வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இயக்குனர் விக்னேஷ் சிவனும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதனை ஆமோதிக்கும் விதமாக அஜித்தின் புகைப்படத்தையும், ஏகே 62 பட அறிவிப்பையும் தனது பயோவில் இருந்து நீக்கினார்.

ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டன

ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டன

விக்னேஷ் சிவனுக்கு பதிலாக அட்லீ ஏகே 62 படத்தை இயக்கப் போகிறார் என்றும், விஷ்ணுவர்தன் இயக்கப் போவதாகவும், ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் வெங்கட் பிரபு என பல இயக்குனர்கள் பெயர்கள் அடிபட்டன. இறுதியாக மகிழ் திருமேனி தான் படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதியாகி உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

அனிருத்துக்கு பதில்

அனிருத்துக்கு பதில்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருந்த ஏகே 62 படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விக்னேஷ் சிவன் மாற்றப்பட்ட நிலையில், அனிருத்துக்கு பதில் ஏகே 62 படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு சந்தோஷ் நாராயணனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லேட்டாகும் அப்டேட்

லேட்டாகும் அப்டேட்

இயக்குனர் மகிழ் திருமேனி லைகா நிறுவனர் சுபாஷ்கரனை சந்திக்க லண்டன் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், வியாழக்கிழமையான நேற்றே லைகா சுபாஷ்கரன் உடன் மகிழ் திருமேனி இருக்கும் புகைப்படம் வெளியாகி ஏகே 62 படத்தின் ஹாட் அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்னமும் எந்தவொரு அப்டேட்டும் வெளியாகாமல் அஜித் ரசிகர்களின் பொறுமையை சோதிக்க ஸ்பெஷலான காரணம் ஒன்று இருப்பதாக கூறுகின்றனர்.

லியோவை விட சூப்பரா சர்ப்ரைஸ்

லியோவை விட சூப்பரா சர்ப்ரைஸ்

விக்ரம், லியோ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டைட்டில் அறிமுகத்திற்கே ப்ரோமோ வீடியோ ரிலீஸ் தேதி என வெளியிட்டு மாஸ் காட்டி வரும் நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்திற்கும் அசத்தலாக ப்ரோமோ வீடியோ ஒன்றை ஷூட் செய்து வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தீபாவளி ரிலீஸ் தேதியுடன் டபுள் சர்ப்ரைஸ் ஆக ஏகே 62 படத்தின் தெறி அப்டேட் காதலர் தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதலர் தினத்துக்கு ட்ரீட்

காதலர் தினத்துக்கு ட்ரீட்


இந்த வாரம் ஏகே 62 அப்டேட் வராமல் அஜித் ரசிகர்களை ஏமாற்றினாலும், அதை சரிகட்டும் அளவுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு பெரிய சர்ப்ரைஸ் கொடுக்க லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். மேலும், லியோவுக்கு செக் வைக்கும் விதமாக பொன்னியின் செல்வன் 2 படத்தையும் லைகா நிறுவனம் ஆயுத பூஜைக்கு ரிலீஸ் செய்ய பிளான் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X