AK 62: அஜித் பிறந்தநாளில் ஏகே 62 டைட்டில் டீசர்... அப்டேட்டுக்கே அப்டேட் கேட்ட ரசிகர்கள்!
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி தான் என்பதை லைகா உறுதி செய்துவிட்டது.
ஆனாலும், இதுவரை ஏகே 62 படம் குறித்து எந்தவித அபிஸியல் அப்டேட்டும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 டைட்டில் டீசருடன் மேலும் ஒரு அப்டேட் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
ஏகே 62 டைட்டில் டீசர்
அஜித் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான துணிவு சூப்பர் ஹிட்டானது. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் தனது 62வது படத்தில் நடிக்க கமிட் ஆனார் அஜித். இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவர் சொன்ன கதையில் திருப்தி இல்லாததால், தற்போது மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்கவுள்ளாராம்.

மகிழ் திருமேனியின் கதை அஜித்துக்கும் லைகாவுக்கும் பிடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து முழு ஸ்கிரிப்ட்டையும் முடிப்பதற்காக மகிழ் திருமேனிக்கு ஆபிஸ் போட்டு கொடுத்துள்ளது லைகா. முதலில் இந்தப் படத்தை விஜய்யின் லியோவுக்கு போட்டியாக ரிலீஸ் செய்ய லைகா முடிவு செய்திருந்ததாம். ஏற்கனவே அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசு திரைப்படமும் பொங்கல் வெளியீட்டில் ஒன்றாக களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால், சில தினங்களுக்கு முன்னர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உயிரிழந்ததால், ஏகே 62 ஷூட்டிங் இன்னும் தொடங்கவே இல்லை. மார்ச் முதல் வாரம் ஏகே 62 டைட்டில் டீசருடன் படப்பிடிப்பை தொடங்க லைகா திட்டமிட்டிருந்தது. முதலில் விக்னேஷ் சிவன் விலகல், அடுத்து அஜித்தின் தந்தை மறைவு ஆகியவற்றால் இப்போதுவரை அப்டேட் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஏகே 62 டைட்டில் டீசர் அஜித்தின் பிறந்தநாள் தினமான மே 1ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் மோஷன் போஸ்டரையும் அன்றைய தினம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாம். ஒவ்வொரு முறையும் அஜித்தின் படத்துக்கு அப்டேட் கேட்டு கேட்டு டயர்டு ஆகிவிடுவதே ரசிகர்களின் வழக்கம். இதேநிலை தான் தற்போது ஏகே 62 படத்திற்கும் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி ஏகே 62 அப்டேட் கண்டிப்பாக வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் அஜித் தனது பிறந்தநாளை பெரிதாக கொண்டாடமாட்டார். அதுவும் இந்தாண்டு அவரது தந்தையும் மறைந்துவிட்டார், அப்படி இருக்கும் போது அஜித்தின் பிறந்தநாளில் ஏகே 62 அப்டேட் எப்படி வெளியாகும் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











