220 கோடி பட்ஜெட்டில் அஜித்தின் ஏகே 62... கன்ஃபார்மா டைரக்டர் அவரே தான்... விலகிய அனிருத்?

சென்னை: அஜித் நடிப்பில் பொங்கலுக்கு ரிலீஸான துணிவு திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு சூப்பர் ஹிட் அடித்தது.

அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஏகே 62 படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவனும், இசையமைப்பாளராக அனிருத்தும் கமிட் ஆகியுள்ளதாக லைகா தரப்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஏகே 62 படத்திற்காக விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் உடன்பாடில்லை என்பதால் மகிழ் திருமேனி இயக்குநராக கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

 ஏகே 62 புதிய அப்டேட்

ஏகே 62 புதிய அப்டேட்

துணிவு படத்தில் தரமான ஹிட் கொடுத்த அஜித், அடுத்து தனது 62வது படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள ரெடியாகிவிட்டார். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருந்தார். இந்நிலையில், திடீர் திருப்பமாக விக்கி சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் திருப்தி இல்லையென்று சொல்லப்படுகிறது. அதனால் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி சொன்ன கதையில் அஜித் நடிக்க முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

 விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

ஏகே 62 ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். விக்னேஷ் சிவனுக்குப் பதிலாக மகிழ் திருமேனி சீனில் வந்தது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக அமைந்தது. தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி, அஜித்தே எதிர்பார்க்காத தரமான கதையை கூறியுள்ளாராம். இதுதான் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்க காரணம் என சொல்லப்படுகிறது. மேலும், ஏகே 63 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கலாம் எனவும், இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 220 கோடி பட்ஜெட்டில் ஏகே 62

220 கோடி பட்ஜெட்டில் ஏகே 62

மகிழ் திருமேனியின் படங்கள் அனைத்துமே ஆக்‌ஷன் ஜானரில் தான் வெளியாகியுள்ளன. அதேபோல் ஏகே 62 படமும் தரமான ஆக்‌ஷன் ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்காக மொத்தம் ரூ.220 கோடி பட்ஜெட்டை லைகா நிறுவனம் ஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அஜித்துக்கு மட்டுமே 105 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதேபோல் மகிழ் திருமேனிக்கும் இரண்டு மடங்கு சம்பளம் கொடுக்கப்பட உள்ளதாம். துணிவு வெற்றியும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனும் ஏகே 62 படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் என்றே பார்க்கப்படுகிறது.

 அனிருத் விலகல்..?

அனிருத் விலகல்..?

லைகா தயாரிப்பில் ஏகே 62 படத்தின் அப்டேட் வெளியான போது, இயக்குநராக விக்னேஷ் சிவனும் இசையமைப்பாளராக அனிருத்தும் மட்டுமே கமிட்டாகியிருந்தனர். இந்நிலையில், தற்போது ஏகே 62ல் இருந்து விக்னேஷ் சிவன் விலகியதால், அனிருத்தும் இந்தப் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக சொல்லப்படுகிறது. நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களில் வெற்றிகரமான கூட்டணியாக வலம் வந்த விக்னேஷ் சிவனும் அனிருத்தும் ஏகே 62ல் இருந்து விலகியதாக வெளியான தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அனிருத்துக்கு பதிலாக தடம் படத்தின் இசையமைப்பாளர் அருண் ராஜ் ஏகே 62ல் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X