AK 62-வில் ‘அது’ தான் பிரச்சினை... அஜித்துக்கு ஓக்கே... ஆனால் லைகா முடிவு வேறு: விக்கி ஓபன்

சென்னை: லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவுள்ள ஏகே 62 படத்தின் அபிஸியல் அப்டேட் வெளியாகி ஓராண்டுக்கும் மேல் ஆகிறது.

முதலில் இயக்குநராக கமிட் ஆன விக்னேஷ் சிவன், திடீரென இந்தப் படத்தில் இருந்து விலகினார்.

தற்போது அவருக்குப் பதிலாக ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

 AK 62: Vignesh Shivan Opens Up About Ajiths AK 62 Story

இந்நிலையில், ஏகே 62 படத்தின் கதை, அதில் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார்.

ஏகே 62 கதையில் அதுதான் பிரச்சினை
துணிவு படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் போதே, அஜித்தின் ஏகே 62 அப்டேட்டை வெளியிட்டது லைகா. அதன்படி அஜித்தின் 62வது படமான 'ஏகே 62'-வை லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அனிருத் இந்தப் படத்தின் மியூசிக் டைரக்டராக கமிட் ஆனார். இதனால் ஏகே 62 மீதான எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டார். அதனை விக்னேஷ் சிவனும் உறுதி செய்திருந்தார். இதனையடுத்து ஏகே 62 குறித்து எதுவும் பேசாமல் இருந்து வந்த விக்னேஷ் சிவன், தற்போது சில இடங்களில் அதுபற்றி பேசி வருகிறார். ஏற்கனவே ஏகே 62வில் இருந்து விலக லைகா தான் காரணம் என மறைமுகமாக கூறியிருந்தார். தற்போது மீண்டும் ஒருமுறை ஏகே 62 சம்பவம் பற்றி மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் ஏகே 62 குறித்து பேசிய விக்னேஷ் சிவன், அந்தப் படம் என் கையை விட்டுப் போனதில் ஏமாற்றம் தான். ஏகே 62 கதையின் இரண்டாம் பாதி லைகா தரப்பினருக்கு பிடிக்கவில்லை. அதுதான் பிரச்சினையாக இருந்தது. ஆனால், என்னால் 2ம் பாதியை அவர்களுக்காக மாற்ற முடியவில்லை. அஜித் சாரிடம் முழு கதையையும் சொல்லி ஓக்கே ஆனபிறகு எப்படி மாற்ற முடியும் என்பதாக பேசியுள்ளார்.

 AK 62: Vignesh Shivan Opens Up About Ajiths AK 62 Story

கதை அப்படி இருக்கலாம் அல்லது இப்படி இருக்கலாம் என தயாரிப்பாளர்கள் சொல்லும் போது அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் தான் விலகினால் பிரச்சினை இல்லை என முடிவுக்கு வந்துவிட்டேன். இது எல்லாவற்றையும் சமாளித்து தான் ஆக வேண்டும் எனவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். அதேபோல், ஏகே 62 படத்தை இயக்கவிருக்கும் மகிழ்திருமேனிக்கும் அவர் வாழ்த்துக் கூறியுள்ளார்.

மேலும், சில நேரங்களில் சில விஷயங்கள் நமக்கு சீக்கிரம் கிடைக்குமா அல்லது தாமதமாக கிடைக்குமா என தெரியாது. ஆனால், எனக்கு இந்த வாய்ப்பு கொஞ்சம் சீக்கிரமே கிடைத்ததாக நான் நினைத்துக் கொள்வதாக கூறியுள்ளார். ஏற்கனவே ஏகே 62வில் இருந்து விலகியது குறித்து விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் அஜித் ஓகே செய்த கதையை, லைகா தரப்பில் வேண்டாம் என சொல்லிருக்க வாய்ப்பில்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

 AK 62: Vignesh Shivan Opens Up About Ajiths AK 62 Story

அஜித் ரசிகர்கள் தனது படங்களை புறக்கணித்துவிடக் கூடாது என்பதற்காக அஜித்துக்கு கதை பிடித்ததாக விக்னேஷ் சிவன் கூறி வருகிறார். அதேபோல், தயாரிப்பு நிறுவனத்தை விட அஜித்தின் கால்ஷீட் தான் முக்கியம். அதனால், அடுத்தமுறை தயாரிப்பு நிறுவனம் மாறினாலும், அஜித்தை எப்படியாவது கமிட் செய்துவிடலாம் என விக்னேஷ் சிவன் திட்டம்போட்டு வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X