AK 62 கதை அஜித்துக்கு பிடிச்சிருந்துச்சு... விக்னேஷ் சிவனின் வடிகட்டிய பொய்... எல்லாம் இதுக்கு தான்!

சென்னை: லைகா தயாரிப்பில் அஜித் நடிக்கவிருந்த ஏகே 62 படத்தின் இயக்குநராக விக்னேஷ் சிவன் கமிட் ஆகியிருந்தார்.

ஆனால், திடீரென இந்தப் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

 AK 62: Vignesh Sivan gave the wrong update on Ajiths AK 62

இதனையடுத்து, ஏகே 62 கதையில் அஜித்துக்கு பிரச்சினை இல்லை, லைகா தான் ரிஜக்ட் செய்துவிட்டது என்ற டோனில் விக்னேஷ் சிவன் பேசியிருந்தார்.

விக்னேஷ் சிவன் இப்படி சொல்வது வடிகட்டிய பொய் என சினிமா விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.

விக்னேஷ் சிவனின் வடிகட்டிய பொய்

 AK 62: Vignesh Sivan gave the wrong update on Ajiths AK 62

நானும் ரவுடிதான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 இயக்குநராக கமிட் ஆகியிருந்தார் விக்னேஷ் சிவன். லைகா தயாரிப்பில் அஜித்தின் 62வது படமாக இது உருவாகவிருந்தது. கடந்தாண்டே அஜித் - விக்னேஷ் சிவன் - அனிருத் - லைகா கூட்டணி உறுதியானதாக அபிஸியலாகவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், சில வாரங்களுக்கு முன்னர் ஏகே 62 படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. மேலும், அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் ஏகே 62 கதையில் அஜித் பக்கம் எந்த பிரச்சினையும் இல்லை எனக் கூறியிருந்தார். அதன்மூலம் ஏகே 62வில் இருந்து விலக லைகா தான் காரணம் என விக்னேஷ் சிவன் மறைமுகமாக கூறியிருந்தார்.

விக்னேஷ் சிவனின் இந்த ஸ்டேட்மெண்ட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. அஜித் ஓகே செய்தபிறகு அந்த கதையை லைகா ரிஜக்ட் செய்ய வாய்ப்பில்லை என கூறி வந்தனர். அவர்கள் நினைத்தது போலவே அதுதான் உண்மை என தற்போது தெரியவந்துள்ளது. இதுபற்றி பேசியுள்ள சினிமா விமர்சகரான வலைப்பேச்சு அந்தணன், விக்னேஷ் சிவன் சொன்னதை கேட்டால் சிரிப்பு தான் வருகிறது என்றுள்ளார்.

 AK 62: Vignesh Sivan gave the wrong update on Ajiths AK 62

மேலும், விக்னேஷ் சிவனின் கவலையே, அஜித் ரசிகர்கள் தனது படங்களை புறக்கணித்துவிடக் கூடாது என்பது தான். அஜித்துக்கு கதை பிடிக்காமல் தான் விக்னேஷ் சிவன் விலக்கப்பட்டதாக தெரிந்தால், அவரது ரசிகர்களும் அதிருப்தியடைவார்கள். அதனால் தான் அஜித்துக்கு கதை பிடித்த மாதிரியும், லைகாவுக்கு பிடிக்கவில்லை என்பதை போன்றும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாக அந்தணன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், அஜித்துக்கு கதை பிடித்துவிட்டால் அவர் தயாரிப்பு நிறுவனத்தின் சம்மதத்திற்காக காத்திருக்க மாட்டார். லைகாவும் அஜித்தின் முடிவை மீறி எதுவும் செய்ய முடியாது. ஆனால், இந்த அடிப்படையான விசயத்தை புரிந்துகொள்ளாமல் விக்னேஷ் சிவன் ஒரு வடிகட்டிய பொய்யை ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கியுள்ளதாக விமர்சித்துள்ளார் வலைப் பேச்சு அந்தணன்.

இதன்மூலம் ஏகே 62 படத்துக்காக விக்னேஷ் சிவன் சொன்ன கதையில் அஜித்துக்கும் லைகாவுக்கும் உடன்பாடில்லை என்றே தெரிகிறது. இதனிடையே ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்கவுள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். இப்படம் மகிழ் திருமேனி கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும், ஒரு ரசிகனாக நானும் பார்க்க காத்திருக்கிறேன் என விக்னேஷ் சிவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X