AK 63: விடாமுயற்சி படத்தை விட வேகமெடுக்கும் ஏகே 63... அஜித் சம்பளம் மட்டுமே இத்தனை கோடியா..?

சென்னை: அஜித்தின் விடாமுயற்சி ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து தனது 63வது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித் குமார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக அஜித்தின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

 AK 63: Ajith is expecting to be paid Rs 185 crore for AK 63

ஏகே 63 படத்தில் அஜித்தின் சம்பளம்: கோலிவுட்டின் மாஸ் ஹீரோவான அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றது. இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படம் குறித்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், சமீபத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியிருந்தார். விஷால், எஸ்ஜே சூர்யா நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி, சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. இதனால், அஜித் தனது ஏகே 63 பட வாய்ப்பை ஆதிக் ரவிச்சந்திரனுக்கு வழங்கியதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், தற்போது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் அஜித்தின் ஏகே 63 படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாம். இதற்கான பேச்சுவார்த்தையில் அஜித்தின் சம்பளம் பற்றியும் முடிவாகிவிட்டதாம்.

அதன்படி, ஏகே 63 படத்துக்காக அஜித்துக்கு 175 முதல் 185 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 100 முதல் 125 கோடி வரை மட்டுமே சம்பளம் வாங்கி வருகிறார் அஜித். ஆனால், ஏகே தமிழ், தெலுங்கு மட்டுமில்லாமல் பான் இந்தியா படமாக உருவாகும் எனத் தெரிகிறது. இதனால் அஜித்தின் சம்பளத்திலும் தாராளம் காட்டியுள்ளது தயாரிப்பு தரப்பு.

முக்கியமாக ஏகே 63 படத்தை இன்னொரு தயாரிப்பு நிறுவனத்துக்காக நடித்துக் கொடுக்க முடிவு செய்திருந்தாராம் அஜித். ஆனால், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்பதால், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளார் அஜித். விஸ்வாசம் படத்தின் ரிலீஸுக்கு முன்பிருந்தே அஜித்திடம் கால்ஷீட் கேட்டு வருகிறதாம் மைத்ரி மூவி மேக்கர்ஸ். அது இப்போது தான் கை கூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X