AK 63: “சந்தேகமே வேண்டாம்... ஏகே 63 இயக்குநர் அவர் தான்..” கன்ஃபார்ம் செய்த அஜித் தரப்பு!
சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்
அதனைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
ஆனால், இந்தப் படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனா அல்லது கோபிசந்த் மலினேனியா என குழப்பம் காணப்பட்டது.

இந்த சர்ச்சைகளுக்கு அஜித் தரப்பில் இருந்தே அப்டேட் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஏகே 63 இயக்குநர் யார்..?
துணிவு வெற்றியைத் தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். லைகா தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். விடாமுயற்சி திரைப்படம் அஜித் ரசிகர்களுக்கான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஏகே 63 மூவியில் கமிட்டாகியுள்ளார் அஜித்.
இதுகுறித்து அபிஸியலாக அப்டேட் வெளியாகவில்லை என்றாலும், இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக தடம் பதித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.
இந்நிலையில், அஜித்தின் ஏகே 63 படத்தை தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாரிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் நீண்ட நாட்களாகவே ஏகே உடன் இணைய வேண்டும் என ஆர்வத்துடன் இருந்தார். சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி 100 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸில் இணைந்தது.
மார்க் ஆண்டனி படத்தின் பல காட்சிகளிலும் அஜித்தின் ரெஃபரன்ஸ் வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். அதுமட்டும் இல்லாமல் ஏற்கனவே அஜித்திடம் கதை சொல்லி அவரது முடிவுக்காக காத்திருந்தாராம். இதனால், ஏகே 63 படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் ஏகே 63 படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக டோலிவுட் இயக்குநர் அஜித்துடன் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ஏகே 63 இயக்குநர் குறித்து அஜித் தரப்பில் இருந்து அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது ஏகே 63 படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பதும், அதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்பதையும் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கன்ஃபார்ம் செய்துள்ளார். அதனால் ஏகே 63 படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குவதாக வெளியான செய்திகள் பொய் எனத் தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











