AK63 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அஜித்.. இயக்குநர் யார் தெரியுமா? AK62 பஞ்சாயத்தே முடியல அதுக்குள்ளயா?

சென்னை : அஜித்தின் 62 படத்தின் பஞ்சாயத்தே இன்னும் முடியாத நிலையில் ஏகே 63 திரைப்படத்தில் கையெழுத்து போட்டுவிட்டதாக தகவல் இணையத்தை திணறடித்து வருகிறது.

என் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவான துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

வங்கியை கொள்ளையடிக்கும் கதையில் அஜித் நெகடிவ் ரோலில் நடித்து அசத்தி இருந்தார். இந்த படத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்து பார்த்து பிளாக் பஸ்டர் ஹிட்டடிக்க வைத்தனர்.

துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே அஜித்தின் 62வது படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கப்போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. துணிவு படம் வெளியானதும் 62படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டது. இதற்காக லொகேஷன் பார்ப்பதற்காக நயன்தாராவுடன் விக்கி வெளிநாடு சென்றதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அனைவரும் காத்திருந்தனர்.

AK 63 movie update, ajith join hands with director siruthai siva

எந்த தகவலும் இல்லை: ஆனால், அஜித்திற்கு விக்னேஷ் சிவனின் கதை பிடிக்காததால் அந்த கதைக்கு நோ சொல்லிவிட்டார். இதையடுத்து, மகிழ்திருமேனியிடம் கதையை கேட்டு ஓகே சொல்ல, தற்போது ஏகே 62 படத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. ஏகே 62 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், அப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இதுவரை வெளியிடவில்லை.

AK 63 movie update, ajith join hands with director siruthai siva

பிறந்த நாளுக்கு அப்டேட் இருக்கு: துணிவு படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆகிவிட்ட போதும், அஜித் 62 திரைப்படம் குறித்து எந்தவிதமான அப்டேட்டும் வெளியாகாமல் உள்ளது. இதனால், ரசிகர்கள் அப்டேட்டை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போனார்கள். மே 1ந் தேதி அஜித்தின் பிறந்த நாள் வர உள்ளதால், அஜித் 62 திரைப்படம் குறித்த அறிவிப்பு நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

AK 63 movie update, ajith join hands with director siruthai siva

அஜித் 62 திரைப்படம் குறித்த பஞ்சாயத்தே முடிவுக்கு வராத நிலையில் அஜித் 63 வது படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது அஜித் 63 படத்தில் கையெழுத்திட்டுவிட்டார் என்றும், இந்த படத்தை வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் இயக்கிய சிறுத்தை சிவா இயக்க உள்ளதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மகிழ்திருமேனியின் படத்தை முடித்துவிட்டு இப்படத்தில் நடிப்பார் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபட்டு வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X