AK 63: அஜித்தின் திடீர் மாற்றம்... ஆதிக் ரவிச்சந்திரன் நோ... ஏகே 63-ல் இணையும் டோலிவுட் இயக்குநர்!

சென்னை: அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

விடாமுயற்சியைத் தொடர்ந்து அஜித்தின் 63வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதாக சொல்லப்பட்டது.

ஆனால், ஆதிக் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக டோலிவுட் இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 AK 63: Tollywood Fame Gopichand Malineni will direct Ajiths AK 63

அஜித்தின் ஏகே 63ல் இணையும் டோலிவுட் இயக்குநர்
அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாயில் தொடங்கவுள்ளதால், தற்போது சில நாட்கள் பிரேக் விடப்பட்டுள்ளதாம். மகிழ் திருமேனி இயக்கத்தில் பிரமமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகிறது விடாமுயற்சி.

விடாமுயற்சி ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போதே அஜித்தின் 63வது படம் குறித்து அப்டேட்ஸ் வெளியாகி வருகின்றன. அதன்படி, ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். விஷால், எஸ்ஜே சூர்யா நடித்திருந்த இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது.

மார்க் ஆண்டனி படத்தின் பல காட்சிகளிலும் அஜித்தின் ரெஃபரன்ஸ் வைத்திருந்தார் ஆதிக் ரவிச்சந்திரன். மேலும், மார்க் ஆண்டனி படத்திற்கு முன்பே அஜித்துக்கு கதை சொல்லியிருந்ததாராம். இதனால், அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல், இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் ஏகே 63 படத்தில் ஆதிக் ரவிச்சந்திரனுக்குப் பதிலாக டோலிவுட் இயக்குநர் அஜித்துடன் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, ஏகே 63 படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஏகே 63 படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாந்த்தும் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷாவும் இணைந்துள்ளார்களாம்.

இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக மகிழ் திருமேனி சீனில் வந்தார். அதேபோல், தற்போது ஏகே 63 படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரனுக்குப் பதில் கோபிசந்த் மலினேனி இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் வரிசையில் அஜித்தும் டோலிவுட் இயக்குநருடன் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X