அஜித் மகனும் சிவகார்த்திகேயன் மகளும்.. அடடே வேற மாதிரி இருக்கேப்பா இவங்க ஆட்டம்.. வீடியோ!

சென்னை: நடிகர் அஜித் குமார் தற்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது 64வது படத்திற்கான தயாரிப்பாளரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு ஓடிக்கொண்டு உள்ளது. இப்படி இருக்கும்போது, அஜித் மகன் ஆத்விக் அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா சிவகார்த்திகேயன் கால்பந்து விளையாடும் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் அவர்கள் விளையாடுவதை நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி, அதேபோல் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Ajithkumar Son Aadvik Ajithkumar and Sivakarthikeyan Daughter Aaradhana Sivakarthikeyan Plays Football Video

நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் மிகவும் நெருக்கமானவர்களா இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடைபெற்ற போது கூட அஜித் குமார் தனது குடும்பத்தினருடனும் சிவகார்த்திகேயன் தனது குடும்பத்தினருடனும் இணைந்து சென்று போட்டியைப் பார்த்தர்கள். இவர்களின் இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவியது.

AK- SK: இது மட்டும் இல்லாமல் அவ்வப்போது அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயன் சந்தித்துக் கொள்வதும் நிகழ்கிறது. அந்த வகையில் இவர்கள் இருவரும் அவர்களின் குடும்பத்தினரும் நெருக்கமாகவே உள்ளனர். இப்படி இருக்கையில் அஜித்குமாரின் மகன் ஆத்விக் அஜித் குமார் ஏற்கனவே விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உடையவர் என்று பலருக்கும் தெரிந்ததே. கால்பந்து, ஓட்டப் போட்டி, தொடர் ஓட்டம், கிரிக்கெட் என பலவற்றிலும் அவருக்கு ஆர்வம் உள்ளது. தனது அப்பா அஜித்தைப் போல கார் ரேஸிலும் ஒரு கண் இருக்கத்தான் செய்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் கூட ஆத்விக் அஜித் குமார் சிறிய ரக ரேஸ் கார் ஓட்டினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

Ajithkumar Son Aadvik Ajithkumar and Sivakarthikeyan Daughter Aaradhana Sivakarthikeyan Plays Football Video

கால்பந்து விளையாட்டு: ஆத்விக் அஜித்குமாரைப் பொறுத்தவரையில் அவருக்கு அதிக ஆர்வம் கொண்ட விளையாட்டு என்றால், அது கால்பந்து தான். இப்படி இருக்கையில் அஜித்குமாரின் மகன் கால்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனா சிவகார்த்திகேயனும் கால்பந்து விளையாட்டில் கோல் கீப்பராக விளையாடி வருகிறார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவைப் பார்த்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் பொங்கலுக்கு பராசக்தி படம் வெளியாகவுள்ளது. படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X