அஜித் சூட்டிங் ஸ்பாட்ல இல்லன்னாலும் அவரைப்பத்திதான் பேசுவாங்க.. பாராட்டித் தள்ளிய ஏகே61 நாயகி!

கொச்சி : அஜித் 61 படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு பாங்காக் செல்லவுள்ளது.

பாங்காக்கில் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 வாரங்கள் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் ஏகே61 படத்தின் தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின்மூலம் மூன்றாவது முறையாக ஹெச் வினோத் -போனிக்கபூர் கூட்டணியில் அஜித் இணைந்துள்ளார்.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித், நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச் வினோத் -தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோ, வில்லன் என இருவேறு கெட்டப்புகளில் அஜித் நடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாங்காக்கில் சூட்டிங்

பாங்காக்கில் சூட்டிங்

இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. குறிப்பாக ஐதராபாத்தில் இந்தப் படத்திற்கான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட் போடப்பட்டு சிறப்பான வகையில் சூட்டிங் நடத்தப்பட்டது. இந்த சூட்டிங்கில் நீண்ட தாடி, கூலர்ஸ், காதில் கடுக்கண் சகிதம் ஒரு கெட்டப்பில் பங்கேற்றார் அஜித்.

இறுதிக்கட்ட சூட்டிங்

இறுதிக்கட்ட சூட்டிங்

இவரது மற்றொரு கெட்டப் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே தொடர்ந்து இருந்து வருகிறது. முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் பூனாவில் நடைபெறவிருந்த நிலையல், அங்கு சூட்டிங் நடத்தப்படவில்லை. தற்போது இறுதிக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழு பாங்காக் செல்லவுள்ளது.

அஜித் குறித்து சுவாரஸ்யம்

அஜித் குறித்து சுவாரஸ்யம்

வரும் செப்டம்பர் 15ம் தேதி பாங்காக்கில் ஏகே61 படத்தின் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விரைவில் படக்குழு பாங்காக்கிற்கு செல்லவுள்ளது. இந்த டீமில் மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் செல்லவுள்ளனர். இந்நிலையில் இந்தப் படத்தில் இணைந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மஞ்சு வாரியர், அஜித் குறித்த சுவாரஸ்யங்களை தனது பேட்டியொன்றில் பகிர்ந்துக் கொண்டார்.

அனைவரையும் கவர்ந்த அஜித்

அனைவரையும் கவர்ந்த அஜித்

அஜித்குமார் சூட்டிங் ஸ்பாட்டில் அனைவரையும் ஒரேமாதிரிதான் நடத்துவார் என்று அவர் கூறியுள்ளார். அவர் சூட்டிங் ஸ்பாட்டில் இல்லையென்றாலும் அஜித்தை அனைவரும் புகழ்ந்து பேசுவார்கள் என்றும் கூறியுள்ளார். அந்த அளவிற்கு அவர் அனைவரையும் தன்னுடைய சிறப்பான நடவடிக்கைகளால் கவர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பாங்காக் சூட்டிங்

பாங்காக் சூட்டிங்

தொடர்ந்து பேசிய அவர், பல இடங்களில், பல சூழல்களில் ஏகே61 படத்தின் சூட்டிங் நடந்து முடிந்துள்ளதாகவும் தொடர்ந்து செப்டம்பர் 15ம் தேதி முதல் பாங்காக்கில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் நடக்கவுள்ளதாகவும் அப்டேட் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துவரும் நிலையில் படத்தின் அப்டேட் கேட்டு போனிகபூருக்கு தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X