ஆட்டத்தை துவக்கிய அஜித்தின் ஏகே61... பூஜையுடன் துவங்கிய படப்பிடிப்பு!

ஐதராபாத் :நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் கூட்டணி தற்போது மீண்டும் அஜித் 61 படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் துவக்கம் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் அப்டேட் கேட்டு வந்தனர். எப்போது சூட்டிங் துவங்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

அஜித்தின் வலிமை

அஜித்தின் வலிமை

நடிகர் அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் வலிமை படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்ததாக இதே கூட்டணி தற்போது ஏகே61 படத்திற்காக இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி நேர்கொண்ட பார்வை, வலிமையை அடுத்து தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.

200 கோடி ரூபாய் வசூல்

200 கோடி ரூபாய் வசூல்

நேர்கொண்ட பார்வை படம் பெண்களின் உரிமை குறித்து பேசிய நிலையில், அடுத்ததாக வலிமை படம் பைக் ரேசிங், குடும்ப சென்டிமெண்ட் உள்ளிட்டவற்றை அதிகமாக பேசியது. இதையடுத்து இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆயினும் படம் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியது.

ஏகே61 படத்தின் சூட்டிங் துவக்கம்

ஏகே61 படத்தின் சூட்டிங் துவக்கம்

படம் சூப்பர் டூப்பர் ஹிட் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஏகே61 படத்தின் பூஜை, சூட்டிங் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பை அவர் செய்யாமல் இருந்தார். இதனிடையே இன்றைய தினம் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் துவங்கியுள்ளது.

பூஜையுடன் துவங்கிய சூட்டிங்

பூஜையுடன் துவங்கிய சூட்டிங்

முன்னதாக படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்று தீபாவளி ரிலீசுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் இசையமைப்பை ஜிப்ரான் மேற்கொண்டுள்ள நிலையில் ஏற்கனவே இரண்டு பாடல்களின் கம்போசிங் நிறைவடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அப்டேட்டை வெளியிடுவாரா போனி கபூர்?

அப்டேட்டை வெளியிடுவாரா போனி கபூர்?

படத்தின் ஒளிப்பதிவை இந்த முறையும் நீரவ் ஷா மேற்கொண்டுள்ளார். இதனிடையே, படத்தின் ஸ்டண்டை சுப்ரீம் சுந்தர் மேற்கொண்டுள்ளார். எப்போதும் தன்னுடைய படங்களின் அப்டேட்களை தொடர்ந்து கொடுத்து வருபவர் தயாரிப்பாளர் போனி கபூர். இன்றைய தினம் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், அவர் எந்த நேரத்திலும் படம் குறித்த அப்டேட் அல்லது போஸ்டரை வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X