பூஜை இப்போ... சூட்டிங் எப்போ.... மாஸான அஜித்61 அப்டேட் இதோ!

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளது.

Recommended Video

The Most Tweeted Actors in South Indian Entertainment in 2021| Filmibeat

இந்நிலையில் அடுத்ததாக அவரது அஜித் 61 படத்தின் பூஜை வரும் 16ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தள்ளிப்போன வலிமை ரிலீஸ்

தள்ளிப்போன வலிமை ரிலீஸ்

நடிகர் அஜித் -எச் வினோத் -போனி கபூர் கூட்டணியில் நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வலிமை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போயுள்ளது. கொரோனா மற்றும் ஓமிக்ரான் பரவலையடுத்து படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது.

ரசிகர்கள் ஏக்கம்

ரசிகர்கள் ஏக்கம்

நேர் கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து வலிமை படம் உருவாக இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளது. அதனால் அஜித்தின் பட ரிலீசுக்காக அவரது ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். வலிமை படம் பொங்கலுக்கு ரிலீசாகி அவர்களது ஆவலை பூர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

ஆனால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போயுள்ளதால் அஜித் ரசிர்கள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆயினும் அவர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு காணப்படுகிறது. மீண்டும் வினோத் -போனிகபூர் கூட்டணியுடன் இணைந்துள்ளார் அஜித்.

அஜித்61 படப்பூஜை

அஜித்61 படப்பூஜை

அஜித் 61 என்று தற்காலிகமாக கூறப்படும் இந்தப் படத்தின் பூஜை வரும் 16ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் படத்தின் முக்கியமானவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மார்ச் மாதத்தில் சூட்டிங்

மார்ச் மாதத்தில் சூட்டிங்

இந்நிலையில் படத்தின் சூட்டிங் பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்கவுள்ளதாக முன்னதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சூட்டிங் மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளதாக அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி, ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடைபெறவுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லர் படம்

ஆக்ஷன் த்ரில்லர் படம்

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் முதல் ஷெட்யூலுக்காக பிரம்மாண்டமான செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளது. இதனிடையே படத்தின் சூட்டிங்கை விரைவில் முடிக்க படக்குழுவிடம் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

7 மாதங்களில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து வரும் தீபாவளிக்கு படத்தை திரையிட போனிகபூர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வலிமை படத்தின் சூட்டிங் கொரோனா உள்ளிட்ட காரணங்களால் தாமதமான நிலையில் தற்போது அஜித் 61 படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவு செய்யப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X