ஏகே62 பட அறிவிப்பு... நாளைக்கு தான் அறிவிக்கப் போறாங்களாம்.. அப்ப இன்னைக்கு இல்லையா!

சென்னை : அஜித்தின் ஏகே62 படத்தின் அறிவிப்பு குறித்து இன்றைய தினம் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அறிவிப்பு நாளைய தினம் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 அஜித்தின் வலிமை படம்

அஜித்தின் வலிமை படம்

நடிகர் அஜித்தின் வலிமை படம் கடந்த மாதத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்தப் படத்தில் அதிகமாக பைக் ரேசிங் காட்சிகள், ஓவர் சென்டிமெண்ட் என கலவையான விமர்சனங்கள் வழங்கப்பட்டது. ஆயினும் இதையெல்லாம் கடந்து அதிகமான வசூல் மழையை பொழிந்துள்ளது.

 ஏகே61 படம்

ஏகே61 படம்

தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான ஏகே61 படத்தின் சூட்டிங் வரும் 18ம் தேதி ஐதராபாத்தில துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்காக ஐதராபாத்தில் பிரம்மாண்டமான அளவில் மவுண்ட் ரோட் செட் போடப்பட்டு சூட்டிங் துவங்கப்பட உள்ளது.

18ம் தேதி துவக்கம்

18ம் தேதி துவக்கம்

அன்றைய தினமே படத்தின் டைட்டில் ரிலீசும் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தையும் ஹெச் வினோத் இயக்கவுள்ளார். போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணையவுள்ள நிலையில் இந்தப் படத்தில் சிறப்பான திரைக்கதையை ஹெச் வினோத் செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

 ஏகே62வை இயக்கும் விக்னேஷ் சிவன்

ஏகே62வை இயக்கும் விக்னேஷ் சிவன்

இதனிடையே அஜித்தின் அடுத்த பட அறிவிப்பும் இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது. இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் நயன்தாரா மீண்டும் அஜித்துடன் ஜோடி சேரவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அக்டோபரில் சூட்டிங் துவக்கம்

அக்டோபரில் சூட்டிங் துவக்கம்

முன்னதாக ஏகே61 படத்திற்கு பிறகு சாலை வழியாக ஐரோப்பாவில் பயணம் மேற்கொள்ள அஜித் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் உக்ரைன் பிரச்சினை காரணமாக அவர் அந்த திட்டத்தை கைவிட்டு, தனது அடுத்தப்பட அறிவிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அக்டோபரில் துவங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நாளை அறிவிப்பு

நாளை அறிவிப்பு

இதனிடையே இந்தப் படத்தின் அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், அறிவிப்பு நாளைய தினம் வெளியாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் சற்று ஏமாற்றமடைந்தாலும் அஜித்தின் அடுத்தடுத்த பட அறிவிப்புகள் அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X