Don't Miss!
- News
ஆர்எஸ்எஸ், பாஜகவை உளவுபார்க்க.. ரிப்போர்டர்களை நியமிக்கும் பிஎப்ஐ? என்ஐஏ வைத்த 'ஷாக்' புகார்
- Lifestyle
வாய் துர்நாற்றத்திற்கு குட்-பை சொல்லணுமா? இதோ அதை தடுக்கும் சில இயற்கை வழிகள்!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Technology
விஷத்தை வெளியேற்றுகிறதா வாட்டர் ஹீட்டர்கள்? பகீர் நிகழ்வால் மக்கள் பீதி.! உண்மை என்ன?
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
துணிவு சூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் செய்த விக்னேஷ் சிவன்.. எப்பங்க ஏகே62 அறிவிப்பு?
சென்னை : நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் துணிவு. இந்தப் படம் வரும் பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.
இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத், விசாகப்பட்டினம், பாங்காக் போன்ற இடங்களில் பிரம்மாண்டமான செட்கள் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டன. படத்தின் சூட்டிங் தற்போது நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
படத்தின் சில பேட்ச் வொர்க்குகள் மற்றும் படத்தின் சில்லா சில்லா பாடலின் சூட்டிங் மட்டும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
சமமான திரையரங்குகளில் வெளியாகும் அஜித் -விஜய் படங்கள்.. ரசிகர்களை எந்தப் படம் கவரும்?

அஜித்தின் துணிவு படம்
நடிகர் அஜித்தின் துணிவு படத்தின் சூட்டிங் தற்போது ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. ஐதராபாத்தில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமான பேங்க் மற்றும் மவுண்ட் ரோடு செட்கள் போடப்பட்டு சிறப்பாக எடுத்து முடிக்கப்பட்டன. தொடர்ந்து சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்தப் படத்தின் சூட்டிங் தள்ளிப் போன நிலையில் தற்போது ஐதராபாத், விசாகப்பட்டினம் மற்றும் பாங்காக் போன்ற இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

சில்லா சில்லா பாடல் சூட்டிங்
தொடர்ந்து படத்தின் சில பேட்ச் வொர்க்குகள் சென்னை மவுண்ட்ரோடில் எடுக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு சில்லா சில்லா என்ற பாடலின் சூட்டிங் கடந்த சில தினங்களாக எடுக்கப்பட்டு வருகின்றன. இன்றைய தினம் இந்தப் பாடலின் சூட்டிங்கும் நிறைவடையும் என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முரட்டு குத்துப் பாடல்
இந்தப் பாடல் சிறப்பான பாடலாக உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளதாகவும் இதற்காக பச்சை பசேல் மற்றும் பனிப்படர்ந்த பின்னணியில் சூட்டிங் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் பாடல் முரட்டு குத்து பாடலாக உருவாகி வருவதாகவும் படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 1ல் அடுத்த அப்டேட்
இதையடுத்து படத்தின் சூட்டிங்கை மொத்தமாக படக்குழு முடிக்கவுள்ளதாகவும் வரும் டிசம்பர் 1ம் வாரத்தில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் அறிவிக்கப்பட்டு துவங்கப்பட்ட நிலையில் 160க்கும் மேற்பட்ட நாட்கள் எந்தவிதமான அப்டேட்டும் இல்லாமல் தொடர்ந்து படக்குழு சூட்டிங்கில் மட்டுமே கவனம் செலுத்தியது.

சூட்டிங் ஸ்பாட்டிற்கு விசிட் செய்த விக்னேஷ் சிவன்
தொடர்ந்து அஜித் 61 படத்தின் டைட்டில் துணிவு என்று அறிவிக்கப்பட்டது. படத்தின் இரண்டு போஸ்டர்களும் வெளியாகின. இதனிடையே தற்போது இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு தெரிவித்து வருகிறது. நேற்றைய தினம் இந்தப் படத்தின் பாடல் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற நிலையில், அஜித்தின் ஏகே 62 படத்தின் டைரக்டர் விக்னேஷ் சிவன், சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று பார்த்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விக்னேஷ் சிவனுடன் இணையும் அஜித்
துணிவு படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ஏகே62 படத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் அஜித். இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான அளவில் எடுக்கப்பட உள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை கொடுத்துள்ள விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து எந்தமாதிரியான கதைக்களத்தில் படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.