காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு தொடர் வாழ்த்து... தொடர் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஏகே62!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா லீட் கதாபாத்திரங்களில் நடித்து விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல என்டர்டெயினர் என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது.
Recommended Video

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா லீட் கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய தினம் வெளியாகியுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தின் விமர்சனங்கள் ஓரளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளது. நயன்தாராவை விட படத்தில் சமந்தா ஸ்கோர் செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

2வது முறையாக இணைந்த கூட்டணி
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப் படத்தில் இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். நானும் ரவுடிதான் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் தற்போது அந்த எதிர்பார்ப்பை ஓரளவிற்கு பூர்த்தி செய்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

முக்கோண காதல் கதை
முக்கோண காதல் கதையை மையமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள நிலையில், ரசிகர்கள் திரையரங்குகளில் படத்தை கொண்டாடி வருகின்றனர். காமெடியை அதிகமாக கொண்டுள்ள இந்தப் படம் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவனின் அடுத்த படைப்பாக வெளியாகியுள்ளது.

சிறப்பான திரைக்கதை
படத்தில் ராம்போ, கதீஜா மற்றும் கண்மணி என்ற கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடித்துள்ள நிலையில், ஒவ்வொரு காட்சிகளையும் சிறப்பான திரைக்கதையுடன் அணுகியுள்ளார் விக்னேஷ் சிவன். சில காட்சிகள் போர் அடித்தாலும் மொத்தத்தில் படம் சிறப்பாக வெளியாகியுள்ளது.

அஜித்62 படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்
இந்நிலையில் அடுத்ததாக அஜித் 62 படத்தை இயக்கவுள்ளார் விக்னேஷ் சிவன். காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ரிலீசையொட்டி இந்தப் படம் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அனிருத் இசை
ஏகே62 படத்தின் ஸ்கிரிப்டை கடந்த 3 ஆண்டுகளாக விக்னேஷ் சிவன் உருவாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ள நிலையில், பாடல்கள் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் இணைந்துள்ள அஜித் இந்த ஆண்டின் இறுதியில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











