விஜய்யின் லியோ பாணியில் ஏகே 62 அப்டேட்... தாறுமாறாக ரெடியாகும் டைட்டில் ப்ரோமோ..?
சென்னை: அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
லைகா தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் அனிருத் இசையமைப்பார் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், விக்னேஷ் சிவன் சொன்ன திரைக்கதையில் திருப்தி இல்லாமல் தான் அவரை லைகா நீக்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், அஜித் - மகிழ் திருமேனி இணையும் ஏகே 62 பட அப்டேட் டைட்டில் ப்ரோமோவுடன் வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

புதிய கூட்டணியில் ஏகே 62
துணிவை தொடர்ந்து அஜித் நடிக்கும் அவரது 62வது படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அஜித் - ஹெச் வினோத் காம்போவில் பொங்கலுக்கு வெளியான துணிவு பாசிட்டிவான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஏகே 62 படத்திற்கும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்க, அனிருத் இசையமைப்பதாக இருந்த ஏகே 62 படத்தின் கூட்டணி இப்போது முழுவதுமாக மாறிவிட்டது. மகிழ் திருமேனி, சந்தோஷ் நாராயணன் என முற்றிலும் புதிய கூட்டணியில் ஏகே 62 உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

விரைவில் அபிஸியல் அப்டேட்
விக்னேஷ் சிவன் சொன்ன திரைக்கதையில் அஜித், லைகா நிறுவனத்துக்கு திருப்தி இல்லையென சொல்லப்படுகிறது. அதனால் விக்னேஷ் சிவனை நீக்கியதோடு ஏகே 62 அப்டேட் வெளியாவதிலும் தாமதமானது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஏகே 62 மியூசிக் டைரக்டராக கமிட் ஆகியிருந்த அனிருத்தும் இதில் இருந்து விலகியதாக தெரிகிறது. அதனால், அவருக்குப் பதிலாக முதன்முறையாக அஜித்துடன் இணைகிறார் சந்தோஷ் நாராயணன். லைகா தயாரிப்பில் அஜித், மகிழ் திருமேனி, சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகும் ஏகே 62 அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏகே 62 டைட்டில் ப்ரோமோ
மேலும் ஏகே 62 படத்தின் கதையை பிஎஸ் மித்ரன் எழுதியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏகே 62 படத்தின் அப்டேட்டை டைட்டிலுடன் அறிவிக்கலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் லியோ டைட்டில் ப்ரோமோ பாணியில் ஏகே 62 டைட்டிலை வெளியிட மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோ சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. தளபதி 67 என தொடங்கப்பட்ட இந்தப் படத்திற்கு லியோ என்ற டைட்டிலை அசத்தலான ப்ரோமோவுடன் வெளியிட்டது படக்குழு.

ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பா?
மேலும், லியோ டைட்டில் ப்ரோமோவுடன் படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதேபாணியில் ஏகே 62 டைட்டில் ப்ரோமோ, ரிலீஸ் தேதி வெளியாகவுள்ளதாக தெரிகிறது. இதற்காக அஜித் ஏதேனும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டாரா இல்லையா என இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. ஆனாலும் கண்டிப்பாக டைட்டில் ப்ரோமோ அல்லது டைட்டிலுடன் ஏகே 62 அப்டேட் வெளியாகவுள்ளதால் அஜித் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். அதேபோல் ஏகே 62 திரைப்படம் இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகும் ஏகே 62 முழுக்க முழுக்க ஆக்ஷன் ஜானரில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











