விக்னேஷ் சிவனால் அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ரெண்டு காதல்.. பறக்கும் AK62 எதிர்பார்ப்பு மீம்கள்!

சென்னை: வலிமை படத்தின் அப்டேட் கேட்டு, அந்த படத்தையும் பார்த்து முடித்து விட்ட அஜித் ரசிகர்களுக்கு அடுத்ததாக ரெண்டு லட்டு தின்னும் யோகம் அடித்திருக்கிறது.

மீண்டும் இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள AK61 படம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், AK62 படத்தின் அட்டகாச அப்டேட்டும் இன்றே வெளியாகப் போகிறது என்கிற தகவல்கள் அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் மீமையே போட்டு AK61 மற்றும் AK62 அப்டேட்டை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

வினோத் உடன் ஹாட்ரிக்

வினோத் உடன் ஹாட்ரிக்

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் படங்களை எடுத்த இயக்குநர் எச். வினோத் உடன் நடிகர் அஜித் இணைந்து நடித்த நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை திரைப்படங்கள் வெளியான நிலையில், மூன்றாவது முறை அதே கூட்டணி மீண்டும் இணைந்து விரைவில் ஒரு அட்டகாசமான படத்தை கொடுக்கப் போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஜித்தின் லுக்

அஜித்தின் லுக்

வலிமை படத்தில் க்ளீன் ஷேவில் மீசை இல்லாமல் அஜித் நடித்தது போல இல்லாமல், AK61 படத்தில் நீண்ட வெள்ளை தாடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நெகட்டிவ் ரோலில் வில்லத்தனம் காட்டப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பே ரசிகர்களை அந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருக்கிறது.

ஏகே 62

ஏகே 62

ஏகே 61 படம் விரைவில் ஆரம்பிக்க உள்ள நிலையில், அடுத்ததாக ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அனிருத் இசையில் அஜித் நடிக்கவுள்ள அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கப் போகிறார் என ஏற்கனவே தகவல்கள் கசிந்துள்ளன.

ரெண்டு காதல் மீம்ஸ்

ரெண்டு காதல் மீம்ஸ்

இந்நிலையில், காலை முதலே #AK62 ஹாஷ்டேக்கை இந்தியளவில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். அஜித் ரசிகர்கள் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய்சேதுபதி சமந்தா மற்றும் நயன்தாராவுக்கு ஒரே நேரத்தில் காதலை மாற்றி மாற்றி சொல்லும் காட்சிகளை பதிவிட்டு AK61 அப்டேட்டுக்காக வெயிட்டிங் என்றும் AK62 அப்டேட்டுக்காகத் தான் வெயிட்டிங் என விக்னேஷ் சிவன் படத்தை வைத்தே மீம் போட்டிருப்பது டிரெண்டாகி வருகிறது.

முந்திய விக்னேஷ் சிவன்

முந்திய விக்னேஷ் சிவன்

ஏகே 61 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பையே இன்னமும் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் இயக்குநர் வினோத் அறிவிக்காத நிலையில், இன்று இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து ஏகே 62 அப்டேட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளதாக உறுதியான தகவல்கள் வந்துள்ளதை அறிந்த ரசிகர்கள் ஏகே 61-ஐ ஏகே 62 முந்திவிட்டதாக மீம் போட்டு வருகின்றனர்.

Recommended Video

'Ajith Sir-அ பத்தி பேசுறதுக்கு யாருக்கும் அருகதை கிடையாது...' | Mayan Movie Audio Launch
பெளர்ணமி நல்ல நாள்

பெளர்ணமி நல்ல நாள்

இயக்குநர் விக்னேஷ் சிவன் பக்திமயமானவர் என்பது நயன்தாராவுடன் அவர் கோயில் கோயிலாக செல்வதில் இருந்தே ரசிகர்கள் அறிந்த ஒன்று தான். இந்நிலையில், பெளர்ணமி நாளான இன்று ஏகே 62 அறிவிப்பை அவர் வெளியிடவும் அதுதான் காரணம் என்றும், மேலும், நடிகர் அஜித்துக்கு வியாழக்கிழமை சென்டிமென்ட் இருப்பதால் இன்றைய தினத்தை தேர்வு செய்துள்ளனர் என நெட்டிசன்களே கமெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X