அதிர்ச்சி.. 25 வயது இளம் நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. பதறிப்போன திரையுலகம்.. அதுதான் காரணமா?

மும்பை: 25 வயது இளம் போஜ்புரி நடிகை இன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் மிர்சாபூரை சேர்ந்தவர் நடிகை ஆகான்ஷா துபே, டிக் டாக் மூலம் பிரபலமான இவர், போஜ்புரி படங்களில் நடித்து வருகிறார்.

நேற்று இரவு கூட இன்ஸ்டாகிராமில் நடனமாடும் வீடியோவை பகிர்ந்த இளம் நடிகை இன்று திடீரென தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தது ஏகப்பட்ட சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

25 வயது இளம் நடிகை தற்கொலை

25 வயது இளம் நடிகை தற்கொலை

தனது டான்ஸ் டிக் டாக் வீடியோக்களால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆகான்ஷா துபே. 1997ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பிறந்த இவர் இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டு இறந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சக நடிகர்கள் மற்றும் நடிகையின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

டிக் டாக் பிரபலம்

டிக் டாக் பிரபலம்

டிக் டாக்கில் ஏகப்பட்ட நடன வீடியோக்களை போட்டு பிரபலமான இளம் நடிகை ஆகான்ஷா துபே 'மெரி ஜுங் மெரா ஃபைஸ்லா' படத்தில் கேமியோ ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். மேலும், முஜ்சே ஷாதி கொரகி மற்றும் சஜன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார்.

காதலரை அறிமுகப்படுத்தினார்

காதலரை அறிமுகப்படுத்தினார்

கடந்த மாதம் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தில் தான் தனது காதலரை நடிகை ஆகான்ஷா துபே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்து இருந்தார். இந்நிலையில், இன்று திடீரென அவர் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரவு கூட இன்ஸ்டா வீடியோ

நேற்று இரவு கூட கடைசியாக கவர்ச்சி உடையில் இன்ஸ்டாகிராமில் நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ள ஆகான்ஷா துபே தனியார் ஹோட்டலில் அதிகாலையில் இறந்து கிடந்த நிலையில், போலீஸாரால் அவரது உடல் மீட்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காதலர் தான் காரணமா

காதலர் தான் காரணமா

சக நடிகரான சமர் சிங் என்பவரை காதலித்து வந்த ஆகான்ஷா துபே கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருவரும் காதலிப்பதை அறிவித்து இருந்தார். இந்நிலையில், திடீரென நடிகை ஆகான்ஷாவுக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு என்ன ஆனது என்றும், இது தற்கொலையா? அல்லது கொலையா? என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

விஜே சித்ரா தற்கொலை

விஜே சித்ரா தற்கொலை

சின்னத்திரை நடிகை விஜே சித்ராவும் ஷூட்டிங் முடித்து விட்டு ஹோட்டல் அறையில் இதே போலத்தான் தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதே போன்றதொரு சம்பவம் போஜ்புரி நடிகை ஆகான்ஷா துபேவுக்கும் நடந்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X