பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க.. சின்னத்திரைத் தொடரில் இருந்து திடீரென விலகிய கார்த்தி பட நடிகை?

By

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதாக, பிரபல நடிகை தான் நடித்து வரும் சீரியலில் இருந்து விலகி இருப்பதாகக் கூறப்படுகிறது.

Recommended Video

Bigg Boss 4 Tamil Latest Update • Contestant List

கார்த்தி நடிப்பில் வெளியான அலெக்‌ஸ் பாண்டியன் மூலம், சினிமாவில் அறிமுகமானவர் ஆகன்ஷா புரி.

சுராஜ் இயக்கி இருந்த இந்தப் படம், 2013 ஆம் ஆண்டு வெளியானது.

பார்வதி தேவி

பார்வதி தேவி

இதற்குப் பிறகு விஷாலின் ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். அடுத்து மம்மூட்டி, முகேஷ் நடித்த பிரைஸ் த லார்ட் என்ற மலையாளப் படத்திலும் சாம்ராஜ்யம், அமர் அக்பர் அந்தோணி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். பின்னர், லாட் என்ற கன்னட படத்தில் நடித்த ஆகன்ஷா, சன் டி.வியில் ஒளிபரப்பான விநாயகர் என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாகவும் நடித்திருந்தார்.

கருத்து வேறுபாடு

கருத்து வேறுபாடு

இந்தியிலும் நடித்துள்ள இவர், டிவி நடிகர், பரஸ் சப்ராவை காதலித்து வந்தார். இருவரும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர். இந்நிலையில், பரஸ், பிக்பாஸ் வீட்டில் இருந்த மஹிரா சர்மா என்பவரை காதலிக்கத் தொடங்கினார். இதன் காரணமாக, ஆகன்ஷாவுக்கும் பரஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை, முறித்துக் கொண்டனர்.

விநாயகர் தொடர்

விநாயகர் தொடர்

பரஸ், காதல் உச்சத்தில் இருந்தபோது, தன் கையில் ஆகன்ஷாவின் பெயரை பச்சைக் குத்தியிருந்தார். காதல் முறிந்ததை அடுத்து டாட்டூவை 'பிக் பாஸ் கண்'ணாக மாற்றினார். ஆகன்ஷாவும் பரஸ் பெயரை தனது கையில் டாட்டூ குத்தியிருந்தார். பின்னர் அவரும் அதை மாற்றி அமைத்தார். இந்நிலையில் ஆகன்ஷா, விநாயகர் தொடரில் இருந்து விலகி உள்ளார்.

பார்வதி தேவியாக

பார்வதி தேவியாக

இந்தியின் சோனி டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடர், விக்னஹர்த கணேஷ். அதாவது விநாயகர் பெருமைகளைச் சொல்லும் தொடர் இது. இதன் ஒரு பகுதிதான் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. ஆனால், இந்தியில் தொடர்ந்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் பார்வதி தேவியாக நடிக்கும் ஆகன்ஷா, திடீரென இதில் இருந்து விலகி உள்ளார்.

அழைப்பு வரவில்லை

அழைப்பு வரவில்லை

அவர், இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விலகியதாகக் கூறப்பட்டது. இதுபற்றி நடிகை ஆகன்ஷா கூறும்போது, விநாயகர் தொடரில் இருந்து விலகியது உண்மைதான். நோட்டீஸ் பீரியடில் இப்போது இருக்கிறேன். பிக் பாஸ் 14 தொடரில் பங்கேற்பதற்காக நான் விலகவில்லை, அதில் இருந்து எனக்கு அழைப்பு வரவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், அவர் அதற்காகத்தான் விலகினார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X