திடீர் ஸ்ட்ரோக்கால் பாதிப்பு.. பிரபல பிக் பாஸ் நடிகையின் தந்தைக்கு மூளையில் ஆபரேஷன்!
மும்பை: பிரபல பிக்பாஸ் நடிகையின் தந்தைக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
சுராஜ் இயக்கத்தில் கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்த படம், அலெக்ஸ் பாண்டியன். இந்தப் படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது.
இந்தப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆகன்ஷா புரி. இதில் சந்தானத்தின் தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார்.

விஷாலின் ஆக்ஷன்
இதையடுத்து மம்மூட்டி, முகேஷ் நடித்த பிரைஸ் த லார்ட் என்ற மலையாளப் படத்திலும் சாம்ராஜ்யம், அமர் அக்பர் அந்தோணி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார். பின்னர், லாட் என்ற கன்னட படத்தில் நடித்த ஆகன்ஷா, தமிழில் விஷாலின் ஆக்ஷன் படத்தில் நடித்திருந்தார்.

பார்வதி தேவி
சன் டி.வியில் ஒளிபரப்பான விநாயகர் என்ற பக்தி தொடரில் பார்வதி தேவியாகவும் நடித்திருந்தார். இந்த தொடர் இந்தியில் இப்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் நடித்து வருகிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். டிவி நடிகர், பரஸ் சப்ராவை காதலித்து வந்தார். இருவரும் இந்த வருடம் திருமணம் செய்துகொள்ள இருந்தனர்.

அறுவைச் சிகிச்சை
இந்நிலையில், பரஸ், பிக்பாஸ் வீட்டில் இருந்த மஹிரா சர்மா என்பவரை காதலிக்கத் தொடங்கினார். இதன் காரணமாக, ஆகன்ஷாவுக்கும் பரஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை, முறித்துக் கொண்டனர். இது பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் இவர் தனது தந்தை ஆர்.கே. புரிக்கு மூளையில் அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பக்கவாதத்தால் பாதிப்பு
கடந்த சில நாட்களுக்கு அவர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார் அவருக்கு இந்தூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை நடிகை ஆகன்ஷா பகிர்ந்துள்ளார். அதில், தான் இப்போது குணமடைந்து விட்டேன். நன்றாக இருப்பதாகவும் அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார் ஆர்.கே.புரி.

என் சூப்பர்மேன்
இதுபற்றி நடிகை ஆகன்ஷா, என் வலிமை, என் சக்தி, என் சூப்பர்மேன் என் தந்தை. புன்னகையுடன் போராடிய சிப்பாய். அவருக்காக வாழ்த்தியவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார். மும்பையில் டிவி ஷூட்டிங்கில் பங்கேற்றிருந்த நடிகை ஆகன்ஷா, இப்போது அப்பாவின் சிகிச்சைக்காக இந்தூரில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











