ஆகாஷ் முரளியை பிரேக்கப் பண்ணும் அதிதி ஷங்கர்.. பில்லா இயக்குநரின் கம்பேக்.. நேசிப்பாயா டிரெய்லர்!
சென்னை: பில்லா, ஆரம்பம் என அஜித் குமாரை வைத்து அட்டகாசமான படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டுக்கு சென்று ஷெர்ஷா எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு மீண்டும் கோலிவுட்டுக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா ஏற்கனவே தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் நிலையில், அவரது தம்பி ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் 'நேசிப்பாயா' திரைப்படம் இந்த பொங்கலுக்கு வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரபு, குஷ்பு, சரத்குமார், கல்கி கோச்லின் என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். நேசிப்பாயா டிரெய்லரில் அனைவரையுமே காட்டி மிகப்பெரிய காதல் காவியத்தை விஷ்ணு வர்தன் உருவாக்கியிருப்பதையும் பதிவு செய்திருக்கிறார்.

பொங்கலுக்கு படையெடுக்கும் லவ் படங்கள்: அடுத்த மாதம் காதலர் தினத்தை குறிவைத்து வெளியாக காத்திருந்த காதல் படங்கள் எல்லாம் தற்போது அஜித்தின் விடாமுயற்சி பொங்கல் போட்டியில் பங்கேற்காமல் பின் வாங்கிய நிலையில், வரிசையாக களமிறங்க திட்டமிட்டுள்ளன. கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள காதலிக்க நேரமில்லை படமும் இந்த பொங்கலுக்கு வெளியாகிறது. விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள நேசிப்பாயா படமும் பொங்கல் ரேஸில் போட்டிப் போடுகிறது.

நேசிப்பாயா டிரெய்லர் எப்படி?: விஷ்ணுவர்தன், யுவன் சங்கர் ராஜா காம்போ 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்து ரசிகர்களுக்கு செம ட்ரீட் கொடுக்க காத்திருக்கிறது. ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கரின் கெமிஸ்ட்ரி நல்லாவே வொர்க்கவுட் ஆகியிருக்கிறது. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் காதல் படம் என்பதால் அதிதி ஷங்கர் தனது சேஃப் ஜோனில் இருந்து இறங்கி வந்து முத்தக் காட்சிகள் உள்பட அதிகமான ரொமான்ஸ் காட்சிகளில் தாராளம் காட்டி நடித்திருக்கிறார். சரத்குமார், பிரபு, ஆவேசமாக கத்தும் குஷ்பு, அட்வைஸ் பண்ணும் அனுராக் காஷ்யப்பின் எக்ஸ் மனைவி கல்கி கோச்லின் என நட்சத்திர பட்டாளத்துடன் லோக்கல் மற்றும் இன்டர்நேஷனல் அளவுக்கு தாம் தூம், மிஸ்டர் லோக்கல் ஸ்டைலில் ஒரு காதல் படமாக இந்த படம் உருவாகி இருப்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது.
பிரேக்கப் பண்ணிடலாம்: எப்போதுமே இந்த மோதிரத்தை கழட்டக் கூடாது என ஆகாஷ் முரளி அதிதி ஷங்கரை நிச்சயம் செய்யும் காட்சிகளும், இருவரும் நெருக்கமாக காதலிக்கும் காட்சிகளும், வீட்டில் ஆளில்லை இப்பவே பார்க்கணும் வரியான்னு கேட்டதும் ஓடோடி செல்லும் ஆகாஷ் முரளி என காதல் காட்சிகள் ததும்ப, பிடிக்கலைன்னு சொல்லல இப்போ கல்யாணம் வேண்டாம்னு தான் சொல்றேன். எனக்கு ஸ்பேஸ் வேண்டும், பிரேக்கப் பண்ணிடலாம் என காதலுக்குப் பிறகு வரும் பிரச்சனைகளுடன் பிரேக்கப் பஞ்சாயத்துகளையும் வைத்து விஷ்ணுவர்தன் செதுக்கியிருக்கிறார். அதிதி ஷங்கரை வெளிநாட்டில் கைதியாக எல்லாம் கொண்டு செல்லும் காட்சிகள் எல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. நிச்சயம் இந்த பொங்கலுக்கு பில்லா இயக்குநர் மீண்டும் கோலிவுட்டில் தரமான கம்பேக் கொடுப்பார் என்றே தெரிகிறது. ஆகாஷ் முரளியை ரசிகர்கள் சிகப்பு கம்பளம் போட்டு வரவேற்பார்களா என்பதை வெயிட் பண்ணிப் பார்ப்போம். மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் இந்த படத்தை தயாரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











