தலையையே பூசணிக்காவா சுத்துனாலும் தமிழ்நாட்டில் படையப்பா தான்.. அகண்டா 2வுக்கு ஆப்பு.. கில்லி வசூல்?
சென்னை: கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் இந்த வாரமும் வருமா என்பது சந்தேகம் தான் என்கிற நிலை உருவாகியுள்ளது. ஆனால், கண்டிப்பாக பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' திரைப்படம் கடந்த வாரம் போல கடைசி நேரத்தில் ஏமாற்றாமல் இந்த வாரம் வெளியாகி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கில் அகண்டா 2 திரைப்படம் வசூலில் மாஸ் காட்டினாலும், தமிழ்நாட்டில், ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ள படையப்பா ரீ ரிலீஸ் படம் தான் மொத்த தியேட்டர்களையும் ரசிகர்களையும் ஆட்கொள்ளப் போகிறது.

ஏற்கனவே புக் மை ஷோவில் ரூ. 30 லட்சத்துக்கும் மேலான வசூல் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் மூலம் குவிந்துள்ளதாகவும், முதல் நாளில் மிகப்பெரிய வசூல் வேட்டையை படையப்பா ரீ ரிலீஸ் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அகண்டா 2வுக்கு ஆப்பு: பாலகிருஷ்ணா, சம்யுக்தா மேனன், ஆதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அகண்டா 2 திரைப்படம் தெலுங்கு சினிமா ரசிகர்களை இந்த வாரம் குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக வெளியான ரிலீஸ் டிரைலரில் ஒரு அடியாளை அப்படியே அலேக்காக தூக்கி அவரது தலையையே பூசணிக்காய் போல சுற்றி நடிகைக்கு திருஷ்டி கழிக்கிறார் பாலகிருஷ்ணா. முதல் பாதியை விட பில்டப் காட்சிகள் எல்லாம் அநியாயத்துக்கு அதிகமாகவே 2ம் பாகத்தில் உள்ளது. தெலுங்கில் இந்த படம் க்ளிக் ஆனாலும், தமிழ்நாட்டில் பெரிதாக ஓடுமா என்பது சந்தேகம் தான் என்கின்றனர்.
படையப்பா ரீ ரிலீஸ் தான்: கார்த்தியின் "வா வாத்தியார்" படமும் 21 கோடி கடன் பிரச்னையை முடித்து விட்டு நீதிமன்ற வழக்கை சரிகட்டினால் மட்டுமே இந்த வாரம் வெளியாகும். இல்லையென்றால், ஏற்கனவே படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது தொடரும் என்றே தெரிகிறது. இந்நிலையில், இந்த வாரம் தமிழ்நாடு தியேட்டர்களை காப்பாற்றப்போவது படையப்பா ரீ ரிலீஸ் மட்டும் தான் என்கின்றனர்.

கில்லி வசூல் வருமா?: கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதை எழுதி தயாரித்து நடித்த படையப்பா திரைப்படம் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரையரங்குகளில் நாளை ரஜினியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. இப்போதே பல தியேட்டர்கள் ஆரஞ்சு அலர்ட்டாக உள்ளது. புதிய படங்களுக்கு கூட இந்தளவுக்கு ஓபனிங் சமீப காலமாக இருக்கவில்லை என்பதே நிதர்சனம். ஆனால், கில்லி படத்தின் ரீ ரிலீஸ் வசூலை படையப்பா முந்துமா? என்றால் அது கேள்விக்குறி தான் என்கின்றனர். படையப்பா படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், அதையும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











