டிவிட்டரில் ட்ரென்ட்டாகும் அக்கா.. யாருன்னு தெரியுமா மக்களே! #Akka
Recommended Video
சென்னை: டிவிட்டரில் ஒரு பக்கம் தல60 பூஜை நாள் ட்ரென்ட்டாகி வரும் நிலையில் மறுபுறம் அக்கா என்ற ஹேஷ்டேகும் ட்ரென்ட்டாகி வருகிறது.
அஜித் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு எல்லா விஷயத்திலுமே போட்டிதான். குறிப்பாக டிவிட்டரில் விஜய் அஜித் ரசிகர்கள் அடித்துக்கொள்ளாத குறையாக போட்டி போட்டு ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்று அஜித்தின் 60 வது படத்தின் பூஜையை முன்னிட்டு #THALA60PoojaDay என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் நேஷனல் லெவலில் ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

அக்கா ஹேஷ்டேக்
இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அதற்கு போட்டியாக #Akka என்ற ஹேஷ்டேகும் ட்ரென்ட்டாகி வருகிறது.

பிறந்தநாள் ஹேஷ்டேக்
அதாவது பிகில் படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு அக்கா என்ற ஹேஷ்டேக்கை ட்ரென்ட் செய்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
சிறப்பான ஆண்டு
தளபதியின் ரசிகையான அர்ச்சனா கல்பாத்தி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். அக்கா இந்த ஆண்டு உங்களுக்கு இந்த சிறப்பானதாக இருக்கும் என டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.
பிகில் பிளாக்பஸ்டருடன்
அக்கா உங்கள் கேரியலும் நீங்கள் இதுபோன்று உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டும். இது பிகில் பிளாக்பஸ்டருடன் தொடங்கட்டும் உங்கள் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துகள். பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா என பதிவிட்டிருக்கிறார் இவர்.

வனிதா அக்காவுக்கு போட்டி
தமிழகத்தை பொறுத்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா அக்காதான் இதுவரை அக்கா என அழைக்கப்பட்டு வந்தார். தற்போது வனிதாவுக்கு போட்டியாக அர்ச்சனா கல்பாத்தியும் அக்காவாகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











