அழுகை எனும் அருவியிலே.. மீண்டும் அழுத அக்ஷரா.. கலாய்த்து தள்ளிய ராஜமாதா.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: பரவாயில்லை இந்த வாரம் பாவனி அழுவதை நிறுத்திட்டாங்க.. ஆனால், அக்ஷரா அதனை தொடர்ந்து கொண்டே இருப்பது ரசிகர்களை இரிடேட் ஆக்கி வருகிறது.
வெள்ளிக்கிழமை எபிசோடிலும் சிபி அப்படி பேசிவிட்டான் என வருணிடம் பேசி புலம்பி அழுது ஆர்பாட்டம் செய்து விட்டார் அக்ஷரா.
புதிய பிக் பாஸ் ஹோஸ்ட்டாக வந்த ரம்யா கிருஷ்ணன் முதல் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது போல அக்ஷராவின் அழுகையை சொல்லி கலாய்த்தது வேற லெவல்.

போட்டி போடணும்
வார்டனாக சிபி ஒருபக்கம் ஸ்ட்ரிக்ட்டாக இருந்தால் மாணவியாக அக்ஷரா மறுபக்கம் ரகளை செய்து அவரை ஓட விட்டு இருந்தால் இந்நேரம் ரசிகர்கள் சிபிக்கு பதிலாக அக்ஷராவை தூக்கி வைத்துக் கொண்டாடி இருப்பார்கள். ஆனால், உடை மாற்றும் அறைக்குள் உட்கார்ந்து கொண்டு அழுது புலம்பிய அக்ஷராவை ரசிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

மீண்டும் அழுகை
அக்ஷரா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் போது அவர் அழுத காட்சிகளை மட்டுமே தனியாக எடிட் செய்து போட்டால் அதுவே ஒரு பெரிய எபிசோடாக மாறிவிடும். அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த நாளில் இருந்து அழுது கொண்டே இருக்கிறார் அக்ஷரா. வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என ரம்யா கிருஷ்ணன் போட்டு காட்ட அங்கேயும் சிபியுடன் நடந்த சண்டையை நினைத்தே புலம்பி அழுது கொண்டிருக்கிறார்.

வருண் ஆறுதல்
பேபி மாதிரி அழுகாத அக்ஷரா என வருணே ஒரு கட்டத்தில் கடுப்பாகி அக்ஷராவை ஆறுதல் படுத்த ஆரம்பித்து விட்டார். முன்னதாக ராஜுவும் வந்து இது தொடர்பாக அக்ஷராவிடம் பேசி சென்ற நிலையில், வருணிடம் சிபி நடந்து கொண்டது தப்பாக இருந்தது ஓவராக நடித்தான் என சொல்லி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி விட்டார்.

ராஜமாதா கலாய்
பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து கருத்து தெரிவித்து பேசிய ரம்யா கிருஷ்ணன் முதல் நபராக அக்ஷரா பற்றி பேச ஆரம்பிக்க ரொம்ப ஓவர எமோஷனல் ஆகிடாதீங்க.. இது ஒரு கேம் ஸ்போர்ட்டிவா விளையாடுங்க.. அடிக்கடி அழுகாதீங்க என குகுவை வந்த உடனே செம கலாய் கலாய்த்து விட்டார்.

பாவனி ஆர்மி ஹேப்பி
குகுவை கலாய்த்து ராஜமாதா கமெண்ட் அடித்த நிலையில், பாவனி ஆர்மியினர் ரொம்பவே ஹேப்பி ஆகி விட்டனர். ஆனால், ரம்யா கிருஷ்ணன் அக்ஷராவுக்கு சார்பாக நின்று சிபியை நோஸ் கட் பண்ண இடத்தில் தான் ரம்யா கிருஷ்ணன் மீது அவர்களுக்கு லேசான கடுப்பு உண்டாகி உள்ளது.

அடுத்த வாரம் அக்ஷராவா?
இந்த வாரம் அக்ஷரா நாமினேஷனில் இல்லாத நிலையில், அடுத்த வாரம் சிபி உள்ளிட்ட பல பேர் அக்ஷராவை நாமினேட் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளன. பாதாள சிறையிலேயே அக்ஷராவை தான் அடைத்திருக்க வேண்டும் பாவம் புதிய வரவு அமீர் மாட்டிக் கொண்டார். இந்நிலையில், நிச்சயம் அடுத்த வாரம் அக்ஷராவை வெளியேற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன என்றும் இல்லை என்றால் இந்த வாரம் ஐக்கியை அனுப்பியது போல அடுத்தது இமான் அண்ணாச்சியை வெளியே அனுப்பினாலும் அனுப்புவாங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











