அசிங்கமா பேசி பீப் போட்டதை எல்லாம் இவ்ளோ அசால்ட்டா பேசி முடிச்சிட்டாங்களே அக்ஷரா?
சென்னை: அக்ஷராவை பார்த்து சிபி அசிங்கமாக பேசி விட்டார். பிக் பாஸா? அல்லது பீப் பாஸா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி பொங்கினர்.
சிபிக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என சீறினர்.
ஆனால், அக்ஷரா அதை ஒரு பொருட்டாகவே நினைக்காமல் சிபி உடன் சுமுகமாக பேசி தீர்த்துக் கொண்டதை எல்லாம் பார்த்தும் இது ஒரு ஸ்க்ரிப்டட் ஷோ இல்லை என்றே சொல்ல வேண்டும் என உலக நாயகன் விரும்புகிறாரே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

பீப் போடும் அளவுக்கு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க்கில் நிரூப்புக்கும் வருணுக்கும் அப்படியொரு சண்டை நடந்தது. அக்ஷராவுக்கும் சிபிக்கும் நடந்த சண்டையில் அக்ஷராவை சிபி ஆபாசமாக திட்ட பீப் போட்டு விட்டனர்.

பிரச்சனையே இல்லை
ஆனால், அப்படி இருவரும் பேசி திட்டிக் கொண்ட போதும் அது ஒரு பிரச்சனையாகவே இந்த வாரம் கிளம்பவில்லை. அதற்கு பதிலாக சிபி சர்வ சாதாரணமாக அக்ஷராவுடன் பாத்ரூம் ஏரியாவில் பேசும் வெள்ளிக் கிழமை காட்சிகள் ரசிகர்களுக்கு நிச்சயம் ஷாக்கிங் சர்ப்ரைஸாகவே இருந்திருக்கும்.

சுமூக பேச்சுவார்த்தை
சிபி தன்னை அப்படி திட்டியதற்கு கொஞ்சமும் அக்ஷரா கோபப்பட்டது போலவே தெரியவில்லை. சிபியும் தனது தவறுக்கு வருந்தியது போலவும் தெரியவில்லை. அதற்கு பதிலாக நான் அப்படி பேசி இருக்கக் கூடாது. அந்த சூழலில் அப்படி பேசிட்டேன். சாரின்னு சிம்பிளா சொல்ல அக்ஷராவும் அழகா மன்னிச்சு விட்டுட்டாங்க..

அப்போ ரெட் கார்டு
என்னங்கடா இப்படி நீங்களே பேசி பஞ்சாயத்தை முடித்து விட்டால் அப்புறம் கமல் சார் எதுக்கு.. விக்கென்ட் பஞ்சாயத்து எதுக்கு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், சிபி தப்பா பேசிட்டாரு.. பிக் பாஸ் தமிழ் ஷோவில் முதன் முறையாக பீப் எல்லாம் போட்டாங்க சிபிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விட வேண்டும் என பொங்கியவர்களுக்கு எல்லாம் பெரிய பல்பை கொடுத்து விட்டனர்.

நம்புங்க இதுவும் ஸ்க்ரிப்ட் இல்லை
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் ஷோ இல்லை என ஒவ்வொரு சீசனிலும் நம்மவர் நா வலிக்க சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால், ஒரு பையலும் நம்பாம இன்னும் அபிஷேக் ராஜாவை போலவே பேசிட்டு இருக்காங்களே.. நம்புங்க அக்ஷராவும் சிபியும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் கெட்ட வார்த்தை பீப் பிரச்சனையை தீர்த்துக் கொண்டனர் இதுவும் ஸ்க்ரிப்ட் இல்லை.


Click it and Unblock the Notifications











