அடிச்சது ஜாக்பாட்.. அக்ஷரா மற்றும் வருண் இணைந்து புதிய படத்தில் நடிக்கப் போறாங்களாம்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் டபுள் எவிக்‌ஷனில் ஒன்றாக வெளியேறிய அக்‌ஷரா மற்றும் வருணுக்கு சினிமாவில் செம ஜாக்பாட் அடித்துள்ளது.

பப்பி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ள வருண் இந்த சீசன் பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று வந்த மாடல் அழகி அக்‌ஷராவும் இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

எலைட் கேர்ள்

எலைட் கேர்ள்

அழகான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய சர்கிளில் எலைட் கேர்ளாக இந்த ஷோவில் பங்கேற்றார் அக்‌ஷரா. மாடல் அழகி சுருதி உடன் இணைந்து பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த அக்‌ஷரா வருண் உடன் இணைந்து எவிக்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.

வருண் உடன் நட்பு

வருண் உடன் நட்பு

பிக் பாஸ் வீட்டில் அதிகமாக யாருடனும் பேசாமல் பிரச்சனை வரும் போதெல்லாம் அழுது கொண்டு இருந்த அக்‌ஷராவுக்கு துணையாக இருந்தது வருண் மட்டுமே. அதன் காரணமாக இருவரும் நட்பாக பழகி வந்தனர். ஒரு கட்டத்தில் வருண் தூங்கும் போது அக்‌ஷரா அவருக்கு முத்தம் கொடுத்த காட்சிகளும் பாவனி ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டது.

ஒன்றாக

ஒன்றாக

பிக் பாஸ் வீட்டில் இருந்து நல்ல நண்பனை சம்பாதித்துக் கொண்ட அக்‌ஷரா அவருடன் வெளியே சென்ற போதும் ஒன்றாக அவுட்டிங் செல்வது என நட்பை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், இருவருக்கும் சூப்பரான விஷயம் ஒன்று நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருணுக்கு ஜோடியாக

வருணுக்கு ஜோடியாக

வருண் மற்றும் அக்‌ஷரா இருவரும் சூப்பர் ஜோடி என ரசிகர்கள் சொல்லி வந்த நிலையில், இருவரும் சினிமாவில் இணைந்து நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாமா இல்லை

மாமா இல்லை

வருணின் பப்பி, ஜோஷ்வா இமை போல் காக்கா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்கப் போவதில்லை என்றும் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் இந்த இருவரையும் வைத்து படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருக்கும் ஐசரி கணேஷ் வாய்ப்பு தர போவதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜோஷ்வா தள்ளிப் போகுமா?

ஜோஷ்வா தள்ளிப் போகுமா?

கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்து உருவாகி உள்ள ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக ஜோஷ்வா இமை போல் காக்க திரைப்படம் மேலும் தள்ளிப் போகுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், தமிழ்ப் படங்கள் ஏதும் ரிலீஸ் தேதி தள்ளிப் போக வாய்ப்பில்லை என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X