இந்த பிரியங்காவ பத்தி என்ன நினைக்கிறீங்க? கமல் கேள்வியே ஒரு தினுசா இருக்கே.. என்ன ஆகப் போகுதோ!

சென்னை: அக்‌ஷரா விவகாரத்தில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்த பிரியங்காவுக்கு சரியான நோஸ் கட்டாக இன்றைய 2வது புரமோ இடம் பெற்றுள்ளது.

ராஜுவுக்கும் பிரியங்காவுக்கும் இடையே சண்டை நடந்து கொண்டிருந்த போது பிரியங்கா வாய் விட அவருக்கும் அக்‌ஷராவுக்கும் இடையே அது பிரச்சனையாக மாறியது.

ராஜு அக்‌ஷராவிடம் போட்ட சண்டைக்கு சமாதானம் செய்த நிலையில், பிரியங்கா அக்‌ஷரா பஞ்சாயத்தை கமல் சார் கையில் எடுத்துள்ளார்.

76வது நாள்

76வது நாள்

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 தொடங்கி 76வது நாள் எபிசோட் இன்று ஒளிபரப்ப காத்திருக்கிறது. இன்னும் வெறும் 4 வாரங்கள் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சி இருப்பதாக கமல் மீண்டும் அழுத்தி சொல்வதை பார்த்தால் வீட்டில் இருக்கும் 11 பேரை எப்படி வெளியேற்றலாம் என்கிற திட்டத்தை பிக் பாஸ் குழு போட்டு வருவதையே அது காட்டுகிறது.

அக்‌ஷராவிடம் கேள்வி

அக்‌ஷராவிடம் கேள்வி

பாவனிக்கு தொடர்ந்து சப்போர்ட் செய்வது போல அவருக்கு ஆப்பு வைக்கும் வேலைகளை செய்து வரும் பிரியங்கா அக்‌ஷராவுக்கு எதிராகவே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அக்‌ஷரா சோக கதைக்கு ராஜு லைக் போட்டதற்கே பாசிட்டிவ் பிரியங்கா அந்த அளவுக்கு பிரச்சனை பண்ண நிலையில், அதே பிரச்சனை தொடர்ந்து கொண்டே வருவது குறித்து பேச அக்‌ஷராவுக்கு கமல் கொடுத்துள்ள வாய்ப்பு இரண்டாவது புரமோவில் இடம் பெற்றுள்ளது.

இந்த பிரியங்கா

இந்த பிரியங்கா

வார வாரம் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணமே பிரியங்கா தான் என கமல் சாரே முடிவு கட்டி விட்டார் போல. ஸ்ட்ராங் பிளேயர் என மக்கள் சொல்லணும் என போன வாரம் குட்டிய கமல் இந்த முறை அக்‌ஷராவிடம் "இந்த பிரியங்காவ பத்தி என்ன நினைக்கிறீங்க?" என கேட்ட தொனியே பிரியங்காவின் தலையை தொங்க போட வைத்து விட்டது.

தக்காளி சட்னி

தக்காளி சட்னி

ஆரம்பத்தில் இருந்தே பிரியங்கா தன்னிடம் பிரச்சனை பண்றாங்க என்றும், அவங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னி என ஏற்கனவே வருணிடம் சொன்ன அதே வசனத்தை கமல் சாரிடமும் சொல்லி நன்றாக கொளுத்தி போட்டுள்ளார். பிரியங்காவின் ரியாக்‌ஷனை பார்த்தால் அக்‌ஷராவுக்கு அடுத்து என்ன ஆப்பு வைக்கலாம் என யோசிப்பது போலவே இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X