நாக்கைத் துருத்தி மிரட்டல்.. ஆத்தாடி பயமால்ல இருக்கு.. வைரலாகும் 'ஸ்டைலிஷ் தமிழச்சி'யின் போட்டோஸ்!

By

சென்னை: பிரபல நடிகை பிகினியில் நாக்கை துருத்தியபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

புகைப்படங்களால் நிரம்பி இருக்கிறது நடிகைகளின் இன்ஸ்டா பக்கங்கள்.

பல நடிகைகள், இதில் பதிவிடுவதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்துகின்றனர். அதற்கு லட்சக்கணக்கில் செலவும் செய்கின்றனர்.

அத்தனை விதம்

அத்தனை விதம்

எந்த நடிகையின் இன்ஸ்டா பக்கத்துக்குச் சென்றாலும் குவிந்து கிடக்கிறது எண்ண முடியாத போட்டோஸ்! அத்தனையும் அத்தனை விதம். இதில் சில நடிகைகள் பிகினிக்கு ஃபேமஸ். அவர்கள் பிகினி போட்டோக்களாக எடுத்து குவித்துத் தள்ளியுள்ளனர். அந்த புகைப்படங்களை காண்பதற்கு குவிகிறார்கள் ரசிகர்கள்.

சத்தம் போடாமல்

சத்தம் போடாமல்

அவர்கள் அந்தப் புகைப்படங்களை, நடிகைகளின் அழகை, வர்ணித்து எழுதும் கமென்ட்களை சத்தம் போடாமல் ரசிக்கிறார்கள், நடிகைகள். கூடவே அவர்களுக்கு இந்தப் புகைப்படங்களின் மூலம் விளம்பரம் மற்றும் சினிமா வாய்ப்புகள் கிடைக்கின்றன. மில்லியன் கணக்கான பாலோயர்கள் இருந்தால், அவர்களை தேடி வருகிறது விளம்பரங்கள்.

கிளாமர் போட்டோஸ்

கிளாமர் போட்டோஸ்

அதனால்தான், பாலோயர்களை அதிகப்படுத்த கிளாமர், ஓவர் ஹாட் ஸ்டில்சை பதிவு செய்து வருகிறார்களாம். சமீபகாலமாக அதிகப்படியான கிளாமர் போட்டோஸை வெளியிட்டு வருகிறார் நடிகை அக்‌ஷரா கவுடா. இவர், சினேகன் ஹீரோவாக நடித்த, 'உயர் திரு 420' மூலம் தமிழில் அறிமுகமானவர்.

அஜித்தின் ஆரம்பம்

அஜித்தின் ஆரம்பம்

பெங்களூர் மாடலான இவர், இந்தியில் ரங்கிரீஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். விஜய்யின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்கிலி கதவ தொற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, நடித்த 'ஆரம்பம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

ஸ்டைலிஷ் தமிழச்சி

ஸ்டைலிஷ் தமிழச்சி

இந்த படத்தில் இடம்பெற்ற 'ஸ்டைலிஷ் தமிழச்சி' பாடல் மூலம் அதிக பிரபலம் அடைந்தார். லாக்டவுனுக்கு முன்பு அவர் கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பனகை படத்தில் நடித்து வந்தார். அவர், இப்போது வெளியிட்டுள்ள பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மேஜிக்கல் கிளாமர்

மேஜிக்கல் கிளாமர்

சிகப்பு நிற டூபீஸ் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு, என் மேஜிக்கல் கிளாமரை யாராலும் திருட முடியாது என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் கிடைத்திருக்கிறது. ஏராளமான ரசிகர்கள் தங்கள் கமென்ட்களை தெரிவித்துள்ளனர்.

பயமால்ல இருக்கு

பயமால்ல இருக்கு

அதில் ஒரு போட்டோவில், காளி மாதிரி நாக்கை துருத்தி போஸ் கொடுத்துள்ளார். 'ஆத்தாடி பயமால்ல இருக்கு' என்று ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர். ஆஹா எங்க மறைச்சு வச்சிருந்தீங்க, இந்த அழகை என்று சிலரும் பிகினியில மிரட்டுறீங்க என்று சில நெட்டிசன்ஸும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X