பச்சை நிறமே, பச்சை நிறமே.. அசத்தும் சேலையில் அள்ளும் அழகு.. வைரலாகும் நடிகை அக்‌ஷரா போட்டோஸ்!

By

சென்னை: அஜித் பட நடிகை, அசத்தும் சேலையில் வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

பாடலாசிரியர் சினேகன் ஹீரோவாக நடித்த, 'உயர் திரு 420' மூலம் தமிழில் அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா.

பெங்களூர் மாடலான இவர், இந்தியில் ரங்கிரீஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

அஜித், நயன்தாரா

அஜித், நயன்தாரா

தமிழில், விஜய்யின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்குலி கதவ தொர போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த 'ஆரம்பம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில் இவர் பங்கேற்ற 'ஸ்டைலிஷ் தமிழச்சி' பாடல் மூலம் இவர் அதிக பிரபலம் அடைந்தார்.

சூர்ப்பணகை

சூர்ப்பணகை

லாக்டவுனுக்கு முன்பு அவர் கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பணகை படத்தில் நடித்து வந்தார். கன்னடம் மற்றும் தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அக்‌ஷரா கவுடா, சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். லாக்டவுனுக்குப் பிறகு நடிகைகள் அதிகமாக தங்கள் நேரங்களை செலவிடுவது சமூக வலைதளங்களில்தான்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

தங்கள் புகைப்படங்கள், ஒர்க் அவுட் வீடியோ உள்பட பலவற்றை அதில் பதிவு செய்து வருகின்றனர். சிலர் பிகினி உள்பட கிளாமர் ஸ்டில்களை பதிவு செய்து வருகின்றனர். இதில் பதிவு செய்வதற்காகவே பல நடிகைகள் ஹாட் போட்டோஷூட்டையும் நடத்தி வருகின்றனர். இதற்காகவே ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

புடவை ஸ்டைல்

புடவை ஸ்டைல்

நடிகை அக்‌ஷரா கவுடாவும் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்த கிளாமர் புகைப்படங்கள் வைரலானது. இப்போது, அவர் புடவை கட்டி ஸ்டைலாக எடுத்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வேற லெவல்ல

வேற லெவல்ல

அவர் அழகை பாராட்டி பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதுதாங்க நம்ம கலாசாரம், வேற லெவல்ல அசத்தறீங்க என்று சிலர் கூறியுள்ளனர். நீங்க அழகா, சேலை அழகான்னு தெரியலையே என்று சில நெட்டிசன்ஸ் வழிந்துள்ளனர். ஒரு ரசிகர், பச்சை நிறமே, பச்சை நிறமே என்ற பாடலை ஞாபகப்படுத்தி இருக்கிறார்.

சந்தோஷமாக இருங்க

சந்தோஷமாக இருங்க

இன்னொருவர், நீங்க என்ன டிரெஸ் போட்டாலும் கலக்கறீங்க என்று பாராட்டி இருக்கிறார். இன்னும் சில நெட்டிசன்ஸ், எப்பவும் சந்தோஷமாக இருங்க, ஏன் முகத்துல அவ்வளவு சோகம் என்று கேட்டுள்ளனர். பலர் அவர் அழகை அப்படி, இப்படி என புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X