சேலையில் நம்ம 'ஸ்டைலிஷ் தமிழச்சி..' இது எக்கச்சக்க அழகாம்ல.. கிர்ராகும் நெட்டிசன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை சேலையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை அதிகம் பதிவிடும் நடிகைகளில் ஒருவர் அக்ஷரா கவுடா.
அடிக்கடி தனது கிளாமர், பிகினி புகைப்படங்களை போஸ்ட் செய்யும் அக்ஷராவுக்கு சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட பேன்ஸ்.

பெங்களூர் மாடல்
அவர் இப்போது சேலையில் எடுத்துள்ள ஸ்டைலான புகைப்படங்களை போஸ்ட் செய்துள்ளார். அள்ளும் அழகில் இருக்கும் இவை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. நடிகை அக்ஷரா கவுடா, சினேகனின். 'உயர்திரு 420' படம் மூலம் தமிழில் அறிமுகமான பெங்களூர் மாடல்.

அஜித்தின் ஆரம்பம்
இந்தியில் ரங்கிரீஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், விஜய்யின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்குலி கதவ தொற போன்ற படங்களில் நடித்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதிக பிரபலம்
இதில் இடம்பெற்ற 'ஸ்டைலிஷ் தமிழச்சி' பாடல் மூலம் அதிக பிரபலம் அடைந்தார். லாக்டவுனுக்கு முன்பு, கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பனகை படத்தில் நடித்து வந்தார். கன்னடம் மற்றும் தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அக்ஷரா கவுடா, சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார்.

ஏராள லைக்ஸ்
லாக்டவுனுக்குப் பிறகு நடிகைகள் அதிகமாக தங்கள் நேரத்தை செலவிடுவது சமூக வலைதளங்களில்தான். அக்ஷரா, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்த பிகினி புகைப்படங்கள் வைரலாயின. இப்போது சேலையில் வெளியிட்டுள்ள போட்டோஸ், ஏராளமான லைக்ஸ்களை பெற்றுள்ளது.

இதுதான் பெஸ்ட்
ரசிகர்கள், இது எக்கச்சக்க அழகா இருக்கு. உங்கள் போட்டோக்கள்லயே இதுதான் பெஸ்ட் என்று பலர் கூறியுள்ளனர். 'உங்களுக்கு பிகினியை விட, சேலைதான் அப்படியே பொருத்தமாக இருக்கு. இதை போல இன்னும் நிறைய போட்டோஸ் போடுங்க' என்று சில நெட்டிசன்ஸ் கோரிக்கை வைத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











