'பொறுப்பா இருந்ததெல்லாம் போதும்.. வாங்க சுதந்திரமா இருப்போம்..' பிரபல நடிகையின் வேற லெவல் ஆசை!

By

சென்னை: கையில் சரக்கு கிளாஸுடன் சுதந்தரமாக இருப்போம் என்று அஜித் பட நடிகை வெளியிட்ட பிகினி ஸ்டில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாவை புகைப்படங்களால் நிரப்பி வருகிறார்கள் நடிகைகள். அது அவர்களுக்கு செல்ல விளையாட்டாக இருக்கிறது.

தினமும் புகைப்படங்களை பதிவு செய்யாவிட்டால், அவர்களால் இருக்கவே முடியாது போலிருக்கிறது.

போட்டோஷூட்

போட்டோஷூட்

தினமும் ஒன்றிரண்டு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்கள் அவர்கள். பல நடிகைகள் இதற்கு அடிக்ட்டாகவே ஆகிவிட்டனர். இதற்காக புதிது புதிதாக போட்டோ ஷூட் நடத்துகின்றனர். அதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்கின்றனர். பலர் வெளிநாட்டு கடற்கரைக்கு சென்று விதவிதமான பிகினி போட்டோஷூட் நடத்துகின்றனர்.

அதிகரிக்கும் பாலோயர்ஸ்

அதிகரிக்கும் பாலோயர்ஸ்

அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகின்றனர். அதற்கு கிடைக்கும் லைக்ஸ், கமென்ட்களில் மயங்கிக் கிடக்கின்றனர் நடிகைகள். ரசிகர்களும் அவர்களின் போட்டோக்களை ரசிப்பதால் பாலோயர்களும் அதிகரிக்கின்றனர்.

விளம்பர ஆஃபர்கள்

விளம்பர ஆஃபர்கள்

இதனால் அவர்களுக்கு வேகமாக வந்து குவிகிறது விளம்பர ஆஃபர்கள். இதற்காகத்தான் இந்த போட்டோஷூட் கூத்துக்கள் எல்லாம். இன்ஸ்டாவில் இஷ்டத்துக்கு போட்டோக்களை பதிவு செய்யும் நடிகைகளில் ஒருவர், அக்‌ஷரா கவுடா. தமிழில், சினேகன் நடித்த 'உயர்திரு 420' என்ற படம் மூலம் அறிமுகமானவர்.

விஜய்யின் துப்பாக்கி

விஜய்யின் துப்பாக்கி

பெங்களூர் மாடலான இவர், இந்தியில் ரங்கிரீஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். தமிழில், விஜய்யின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்குலி கதவ தொற போன்ற படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த 'ஆரம்பம்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

அதிக பிரபலம்

அதிக பிரபலம்

இதில் இவர் பங்கேற்ற 'ஸ்டைலிஷ் தமிழச்சி' பாடல் மூலம் இவர் அதிக பிரபலம் அடைந்தார். லாக்டவுனுக்கு முன்பு அவர் கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பனகை படத்தில் நடித்து வந்தார். கன்னடம் மற்றும் தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அக்‌ஷரா கவுடா, சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார்.

ரசிகர்கள் வெயிட்டிங்

ரசிகர்கள் வெயிட்டிங்

அவர் வெளியிடும் புகைப்படங்களைப் பார்ப்பதற்காக காத்திருக்கிறார்கள் ரசிகர்கள். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வெளியிட்டிருந்த கிளாமர் புகைப்படங்கள் வைரலானது. பின்னர் புடவை கட்டி ஸ்டைலாக எடுத்த போட்டோஸும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

சரக்கு கிளாஸ்

சரக்கு கிளாஸ்

இப்போது கோவா சென்றுள்ள அவர், கடற்கரை மணலில் டூ பீஸ் உடையில் ஹாயாக படுத்தபடி வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படத்தை அதிகமானோர் பகிர்ந்து வருகின்றனர். இந்த போட்டோவுக்கு கேப்ஷனாக, 'பொறுப்பா நிறைய நடந்தாச்சு. இப்ப கடற்கன்னிகளாக இருப்போம். கால்கள் மணல்ல, கையில சரக்கு கிளாஸ்னு சுதந்திரமா இருப்போம். சரிதானே? என்று கூறியுள்ளார்.

ஹாட் தமிழச்சி

ஹாட் தமிழச்சி

இதற்கு ஒருவர், ஸ்டைலிஷ் தமிழச்சி, ஹாட் தமிழச்சி ஆயிட்டாங்களே என்று கூறியுள்ளார். நான் ஒரு நிமிஷம் ஹாலிவுட் நடிகையோன்னு நினைச்சுட்டேன். உண்மையிலேயே இது ஹாட் போட்டோதான் என்று ஒரு நெட்டிசன்ஸ் கூறியுள்ளார். சிலர், பிகினி உங்களுக்கு சிறப்பாக இருக்கு. இன்னும் நிறைய போட்டோஸ் போடுங்க என்று சிலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X