சரக்கு கிளாஸுடன் 'ஸ்டைலிஷ் தமிழச்சி' அதகளம்.. 'தனியா குடிச்சா உடலுக்கு கேடு..' ரசிகர்கள் கலாய்!

By

சென்னை: பிரபல நடிகை கையில் சரக்கு கிளாஸூடனும் பிகினியிலும் எடுத்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சினேகன் ஹீரோவாக நடித்த, 'உயர்திரு 420' மூலம் தமிழில் அறிமுகமானவர் அக்‌ஷரா கவுடா.

பெங்களூர் மாடலான இவர், இந்தியில் ரங்கிரீஸ் உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ஸ்டைலிஷ் தமிழச்சி

ஸ்டைலிஷ் தமிழச்சி

தமிழில், விஜய்யின் துப்பாக்கி, இரும்பு குதிரை, சங்கிலி புங்குலி கதவ தொர போன்ற படங்களில் நடித்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி நடித்த ஆரம்பம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இதில் இவர் பங்கேற்ற 'ஸ்டைலிஷ் தமிழச்சி' பாடல் மூலம் அதிக பிரபலம் அடைந்தார்.

நேரத்தை செலவிடுவது

நேரத்தை செலவிடுவது

லாக்டவுனுக்கு முன்பு, கார்த்திக் ராஜு இயக்கும் சூர்ப்பணகை படத்தில் நடித்து வந்தார். கன்னடம் மற்றும் தமிழில் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் அக்‌ஷரா கவுடா, சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருக்கிறார். லாக்டவுனுக்குப் பிறகு நடிகைகள் அதிகமாக தங்கள் நேரத்தை செலவிடுவது சமூக வலைதளங்களில்தான்.

கிளாமர் ஸ்டில்ஸ்

கிளாமர் ஸ்டில்ஸ்

தங்கள் புகைப்படங்கள், ஒர்க் அவுட் வீடியோ உள்பட பலவற்றை அதில் பதிவு செய்து வருகின்றனர். சிலர் பிகினி உள்பட கிளாமர் ஸ்டில்களை பதிவு செய்து வருகின்றனர். நடிகை அக்‌ஷரா கவுடாவும் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்த கிளாமர் புகைப்படங்கள் வைரலானது.

பஞ்சமில்லாத பிகினி

பஞ்சமில்லாத பிகினி

இப்போது அவர் கோவாவில் இருக்கிறார். அங்கிருந்து தினமும் ஏதாவது புகைப்படங்களை பதிவு செய்துகொண்டே இருக்கிறார். பீச் மற்றும் பிகினி புகைப்படங்களுக்கும் பஞ்சமில்லை. அவர் இப்போது வெளியிட்டுள்ள போட்டோவில் கையில் மதுகோப்பையுடன் இருக்கிறார். நெட்டிசன்ஸ்களுக்கு சியர்ஸ் சொல்லியபடி ஹாயாக இருக்கிறார்.

உடலுக்கு தீங்கானது

உடலுக்கு தீங்கானது

இதற்கு ரசிகர்கள் கண்டபடி கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர். ஒருவர், என்னை விட்டுவிட்டு மது குடிப்பது உடல் நலத்துக்கு தீங்கானது என்று நக்கலாகக் கூறியிருக்கிறார். ஒரு சாயல்ல நடிகை நேகா சர்மா மாதிரியே இருக்கீங்க என்று சிலரும், ஸ்டைலிஷ் தமிழச்சிங்கறதை நிரூபிக்கிறீங்களே என்று சிலரும் கூறியுள்ளனர்.

புகழ்ந்து தள்ளினர்

புகழ்ந்து தள்ளினர்

மற்றொரு போட்டோவில் சில பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கும் நெட்டிசன்ஸ் கண்டபடி கமென்ட்களை பதிவு செய்துள்ளனர். கில்லர் லுக், ஸ்டன்னிங், கடல் கன்னி என்றும் பலர் புகழ்ந்து தள்ளியுள்ளனர். முடிவில்லாத அழகு, போட்டோல இருந்து கண்ணை திருப்பவே முடியலை என்றும் பலர் வழிந்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X