அக்ஷரா விவகாரம்: கமல், சரிகா நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று

By Siva

மும்பை: தங்களின் இளைய மகள் அக்ஷரா இயக்குனர் ஆவார் என்று கமலும், சரிகாவும் எதிர்பார்க்க அவர் அக்கா ஸ்ருதியை அடுத்து நடிக்க வருகிறார்.

கமலின் இளைய மகள் அக்ஷரா பாலிவுட் இயக்குனர் ஆர். பால்கியின் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கவிருக்கிறார். இத்தனை நாட்களாக நடிக்க வாய்ப்பு வந்தபோது கேமராவுக்கு பின்னால் இருக்க விரும்புவதாக அவர் தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் கமல் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

அக்ஷரா

அக்ஷரா

கமல்ஜி மற்றும் சரிகாஜி அக்ஷரா இயக்குனர் ஆவதில் அதிக ஆர்வமாக இருப்பதாக நினைத்தனர். சரிகா அக்ஷராவை தனது நண்பர் ராகுல் தோலாகியாவிடம் சேர்த்துவிட்டார் என்று அவர் தெரிவித்தார்.

துணை இயக்குனர்

துணை இயக்குனர்

அக்ஷராவும் பர்ஸானியா மற்றும் சொசைட்டி ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளார். அக்ஷரா தோலாக்கியாவிடம் துணை இயக்குனராக வேலை பார்த்தார். அதனால் அவர் இயக்குனராகப் போகிறார் என்று அவரின் குடும்பத்தார் நினைத்தனர் என்றார் அவர்.

கமல்

கமல்

அக்ஷரா ராகுல் தோலாக்கியாவிடம் துணை இயக்குனராக உள்ளார். அவர் நடிப்பை விட இயக்கத்தில் அதிக ஆர்வமாக உள்ளார். கேமராவுக்கு பின்னால் இருந்து கொண்டு நான் இங்கு தான் இருக்க விரும்புகிறேன் என்று அவர் கூறும்போதெல்லாம் எனக்கு என் ஞாபகம் வருகிறது. ஏன் என்றால் நானும் கேமராவுக்கு பின்னால் இருந்து துவங்கி முன்னால் வந்தவன். அவரும் அப்படி செய்யலாம். ஆனால் தற்போதைக்கு இல்லை என்று கமல் முன்பு தெரிவித்திருந்தார்.

அடுத்த மாதம்

அடுத்த மாதம்

அக்ஷராவிடம் ஒளிந்திருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்த பால்கி தனது படத்தின் ஷூட்டிங்கை அடுத்த மாதம் துவங்குகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X