»   »  ஏகே 57: அஜித்துக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் அக்ஷரா ஹாசன்!

ஏகே 57: அஜித்துக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் அக்ஷரா ஹாசன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்தின் ஏகே 57 படத்தில் அவருக்கு ஜோடியாக அக்ஷரா ஹாசன் நடிக்கவிருக்கிறார்.

சிறுத்தை சிவா-அஜீத் கூட்டணியில் உருவாகவிருக்கும் ஏகே 57 படத்தில் ஹீரோயினாக காஜல் அகர்வாலையும், காமெடியனாக கருணாகரனையும் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது.

சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதுவரை இப்படத்திற்கான 3 பாடல்களை அனிருத் முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

Akshara Haasan Debut in Tamil

இந்நிலையில் அக்ஷரா ஹாசனை இப்படத்தின் 2 வது ஹீரோயினாக படக்குழு ஒப்பந்தம் செய்திருக்கிறதாம். சமீபத்தில் இப்படத்தின் கதையைக் கேட்ட அக்ஷரா உடனடியாக சம்மதம் சொல்லி விட்டாராம். அந்தளவுக்கு அவரின் வேடம் மிகவும் ஸ்டைலிஷாக இருக்குமாம்.

மேலும் இப்படத்தில் அக்ஷராவுக்கு முக்கிய வேடமென்றும், அஜித்துக்கு இணையாக அக்ஷராவின் கதாபாத்திரம் பேசப்படுமென்றும் கூறுகின்றனர்.

ஏகே 57 மூலம் தமிழில் அறிமுகமாகும் அக்ஷரா தற்போது 'சபாஷ் நாயுடு' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாதம் ஏகே 57 படக்குழுவினருடன் அவர் இணைந்து கொள்வார் என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அக்ஷராவின் அக்காவும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Akshara Haasan Play a Key Role in AK 57.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil