Fingertip வெப் சீரிஸ் மூலம் சின்னத்திரைக்கு வரும் அக்ஷரா ஹாசன்

By R VINOTH

சென்னை: பாலிவுட்டில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் நடித்து வரும் கமல் மகள் அக்ஷரா ஹாசன் இப்போது வெப் சீரிஸ்சிலும் கலக்கப்போறார். அவர் நடிக்கிருக்கிற ஃபிங்கர்டிப் அப்படிங்கிற வெப் சீரிஸ் ஆகஸ்ட் 21ஆம் தேதி ரிலீஸ் ஆகுது. அந்த வெப் சீரிஸ்சின் டீசர் இப்போ சோசியல் மீடியாவுல டாக் ஆக இருக்கு. சின்னத்திரையோ பெரிய திரையே கேரக்டர்தான் முக்கியம் என்கிறார் அக்ஷராஹாசன்.

ரேடியோ, தொலைக்காட்சி, சினிமா, டிவி சீரியல் வரிசையில் வெப் சீரிஸ் புதிதாக பிரபலமாகி வருகிறது. வெப் சீரிஸ் மக்கள் மூலம் நல்ல வரவேற்பு பெறுகிறது, ஆனால் இது பிற்காலத்தில் வெப் சீரிஸ் எந்த நிலையில் இருக்கும்னு தெரியவில்லை.

பிற்காலத்தில் வெப் சீரிஸ் நல்ல இடத்துக்கு வந்தால்

சினிமா நிலைமை என்ன ஆகும்னு சிந்திக்க வைக்குது. சினிமாவில் பணிபுரியும் இயக்குனர்கள் வெப் சீரிஸ் ஆர்வம் காட்டுகின்றனர், அதுக்கான காரணம் சினிமாவில் ஒரு கதைக்கரு சொல்லுவதற்கு மூன்று மணி நேரம் போதவில்லை, அது மட்டும் இல்லாமல் சினிமாவில் சென்சார் போர்டு இருப்பதால் அனைத்து விசயங்களையும் பொதுவான மக்களுக்கு காண்பிக்க முடியாது என்பதன் மூலம் வெப் சீரிஸ் வருவதற்கு இதுவும் காரணமாக இருக்கலாம். கலையை ரசிக்கும் மக்கள் இருக்கும் வரை எந்த ஊடகங்களும் அழியாது.

அக்ஷரா ஹாசன்

அக்ஷரா ஹாசன்

வெப்சீரிஸில் நடிக்க அனைத்து முன்னணி நடிகர்களும் ஆர்வமாக முன்வருகிறார்கள். தனுஷ் நடிப்பில் வெளியான ஷமிதாப் படத்தின் மூலம் திரைத்துறைக்குள் கால் பதித்த அக்‌ஷரா ஹாசன். தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த 'விவேகம்' படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் ரிலீஸ் ஆன கடாரம் கொண்டானில் அக்ஷராவோட நடிப்பு பேசப்பட்டது. இப்போது அக்ஷராவும் வெப் சீரிஸில் நடித்திருக்கிறார்.

ஃபிங்கர் டிப்ஸ் ஆகஸ்ட் 21ல் ரிலீஸ்

ஃபிங்கர் டிப்ஸ் ஆகஸ்ட் 21ல் ரிலீஸ்

இந்த வெப் சீரிஸ் பெயர் "Fingertip". இதில் சுனைனா, மதுசூதன் ராவ், காயத்ரி மற்றும் அஸ்வின் காகுமானு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஃபிங்கர்டிப்ஸ் வெப் சீரிஸ் ஆகஸ்ட் 21ல் ஜீ 5ல் தினசரியும் எபிசோடுகள் வெளியாக இருக்கிறது. இந்த வெப் சீரிஸின் டீஸரை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

 கேரக்டர் முக்கியம் பாஸ்

கேரக்டர் முக்கியம் பாஸ்

அக்ஷரா ஹாசன் நடித்து வந்த திரைப்படம் எல்லா மக்களிடமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அவரோட கதாபாத்திரங்களும் சிறப்பாக பேசப்பட்டது. அதுபோல இதுவும் நல்ல கதாபாத்திரமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்தது பற்றி கேட்டால் கேரக்டர் நன்றாக இருந்தால் சினிமாவோ சின்னத்திரையே எதிலும் நடிக்கலாம் என்று கூறியுள்ளார் அக்ஷரா ஹாசன்.

கதையின் கரு

கதையின் கரு

இந்த வெப் சீரிஸ் கதையின் கரு தொலைபேசி மற்றும் இணையவலைதளம் மூலம் நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வெப் சீரிஸ் எழுத்தாளர் ஷீலாஜோஸ் எழுதிய "Goodbye Girl" புத்தகத்தில் இருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதை இயக்குனர் ஷிவ்கர் இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X