ட்ராகன் பழத்தோட ஜாம் சாப்ட்டு இருக்கீங்களா... உருகிய அக்சரா ஹாசன்... லாக்டவுன் அட்டகாசங்கள்
மும்பை : லாக்டவுனில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடிப்பு அல்லாத தங்களது மற்ற திறமைகளை சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதில் நடிகை அக்சரா ஹாசன் வித்தியாசமான ஜாம் வகைகளை செய்து அசத்தி வருகிறார்.
சமீபத்தில் ட்ராகன் பழத்தை கொண்டு ஜாம் செய்து, அதன் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

வீடுகளில் முடக்கம்
கொரோனா பாதிப்பு அனைத்து தரப்பினரையும் தங்களது வீடுகளில் முடக்கியுள்ளது. சிலரை வீட்டிலிருந்து வேலை செய்ய வைத்துள்ளது. சிலர் வேலை வெட்டி இல்லாமல் வீடுகளில் முடங்கியுள்ளனர். சிலர் தங்களது சோர்வை வெளிப்படுத்துகின்றனர். சிலர் வீட்டிலிருந்தபடியே சமூக நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.

நன்மையையும் செய்யும் லாக்டவுன்
சிலர் நடிப்பு இல்லாமல் தங்களது மற்ற திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தொடர் சூட்டிங்கால் இவைகளை செய்வதற்கு நேரமில்லாமல் இருந்த அவர்களுக்கு இதை மீண்டும் தோண்டியெடுக்கவும் நேரம் கிடைத்துள்ளது. மொத்தத்தில் இந்த கொரோனா லாக்டவுன் பலருக்கு நன்மைகளையும் செய்துதான் வருகிறது.

அசத்தும் அக்சரா
இதனிடையே நடிகை அக்சரா ஹாசனும் தன்னுடைய திறமைகளை தற்போது வெளிப்படுத்தி வருகிறார். அவர் விதவிதமாக ஜாம்களை செய்து அடுக்குகிறார். சமீபத்தில் டிராகன் பழத்தில் ஜாம் செய்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படமாக வெளியிட்டுள்ளார்.
Recommended Video

அக்சரா நன்றி
சில ஆர்ட் வேலைகளையும் செய்துள்ளதாகவும் அதை விரைவில் ரசிகர்களுடன் ஷேர் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஓய்வில்லாமல் உழைத்துவரும் ப்ரண்ட்லைன் ஊழியர்களுக்கும் அவர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

புதிய போட்டோ ஷூட்
இதுவும் கடந்து போகும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனிடையே, தற்போது அவர் தனது புதிய போட்டோஷூட்டை எடுத்து அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். தற்போது அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற படத்தில் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











