என் அப்பா ஒரு உண்மையான போராளி.. அக்ஷரா ஹாசன் ட்விட்!
சென்னை : மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசன் தனது தந்தை குறித்து அழகான கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கமலஹாசனின் மகள்களான ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவருமே திரைத்துறையில் நுழைந்து தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.
தற்போது, பிரச்சார வேனில் கமல்ஹாசனுடன் அக்ஷரா இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது.

பிரசாரம்
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக தவிர மூன்றாவது அணியாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிடுகிறார்.

பலமான போட்டி
கோவை தெற்கு தொகுதியில் கமலஹாசன் போட்டியிடுகிறார். இதனால், கோவையில் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். அவர் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமாரும், அதிமுக கூடடடணி சார்பில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும் போட்டியிடுகின்றனர்.

கவனித்துக்கொள்ள
கமல்ஹாசனின் காலில் அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், அவரை கவனித்துக் கொள்ள அவரின் இளைய மகள் அக்ஷரா ஹாசனும் பிரசாரத்திற்கு உடன் செல்வதாக கூறப்பட்டது. இதை உறுதி செய்யும் விதமாக பிரசார வாகனத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அக்ஷரா ஹாசன். இதில், பிரசார வேன் உள்ளே அக்ஷரா இருப்பது போன்றும், கமல்ஹாசன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு இருவரும் நடந்து செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

போராடுவார்
இந்நிலையில், அக்ஷர ஹாசன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், எனது அப்பா ஒரு உண்மையான போராளி என்றும் அவர் விரும்பியதை செய்யும்போது அவர் எல்லாவகையான வலிகளையும் தாங்கிக் கொண்டு போராடுகிறார் என்றும் அவர் அதில் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











